FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Monday, March 1, 2010

IDAயும் குறையப் போகுதாமே!

IDA விலும் இழப்பு

68.2% IDA merger என அதிகாரிகள் சங்கங்கள் கண்ட உடன்பாட்டின் அடிப்படையில் அங்கீகாரச் சங்கமும் அதன் கூட்டணிகளும் ஊழியர்களுக்கும் அதே அடிப்படையிலேயே உடன்பாடு கண்டிருப்பது 1-1-2007 முதல் மூன்று ஆண்டுகளுக்கு புதிய சம்பளத்தில் நியாயமாகக் கிடைக்க வேண்டிய IDA வில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சொல்வது கார்ப்பரேட் அலுவலகத்தில் ADG ஆகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள திரு ராகேஷ் சர்மா.

ராகேஷ் சர்மாவின் கடிதம் இது.

DPE அதன் வழிகாட்டுதல் அறிக்கைகளில், 1-1-2007 ல் புதிய சம்பளம் நிர்ணயிக்கப் படும்போது சம்பளத்துடன் 78.2% IDA சேர்க்கப் படவேண்டும் என்ற அடிப்படையிலேயே கணக்கிட்டு வழிகாட்டியுள்ளது. அந்த அறிக்கையின் 2வது பாரா இதை வலியுறுத்துகிறது.

Para 2 of recent circular of DPE for payment of 30.9% IDA vide F.No.2(70)/2008-DPE(WC)-GL-I/ 2010 dated 15th January 2010 states as below:-

“2 The above rates of DA would be applicable in the case of IDA Employees who have been allowed revised pay scales (2007) as per DPE O.M. dated 26/11/2008. 09/02/2009 & 02/04/2009.”

இது சொல்வது என்ன? DPE வழிகாட்டல்களின்படி 1-1-2007 சம்பள நிர்ணயத்தில் 78.2% IDA இணைக்கப் பெற்றவர்களுக்கு மட்டுமே புதிய சம்பளத்தில் 30.9%IDA வழங்கப்படவேண்டும் என்றும் 68.8%IDA சேர்க்கப் பட்டவர்களுக்கு இது பொருந்தாது எனவும் கூறுகிறது.

68.8%IDA என சேர்க்கப் பட்டதால், அதன் அடிப்படையில் ப்ரபோர்ஷனேட் பார்முலா கணக்கிடப்பட்டால், BSNL ஊழியர்களுக்கு 1-1-2007 முதல் வாங்கிய IDA எல்லாவற்றையும் மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அப்படி மாற்றும்போது புதிய சம்பளத்தில் 32%IDA மட்டுமே கிடைக்கும்.

இது குறித்து அதிகாரிகளுடன் விவாதித்தபோது தங்களுடைய வழிகாட்டுதல்கள்படி 78.2% இணைத்து சம்பள மாற்றங்கள் பெற்றிருந்திருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர்.

ஒருவேளை 68.8%தான் என இருந்துவிட்டால், பார்முலாவை மாற்றி உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும். இல்லையென்றால், பணியில் இருக்கும் ஊழியர்களும், குறைவான ஓய்வு பெற்றோரும் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.

அதிகாரிகள் சங்கங்கள் உடன்பாடு எட்டியபோது இந்த உத்தரவுகள் வெளியாகவில்லை. ஆனால் ஊழியர்களுக்கு உடன்பாடு ஏற்படும் முன்னமே இந்த வழிகாட்டல் உத்தரவுகள் வெளியானது. இதை நமது தேசிய சங்கம் எடுத்துச் சொல்லி 78.2% இணைப்புக்கு வழிகாண வேண்டுகோள் விடுத்ததை அங்கீகாரச் சங்கங்கள் சரியாகப் புரிந்து அதன்படி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாததால் இன்று இந்த நிலை.

ஆக குறைவான சம்பளம், குறைவான IDA, குறைவான பதவி உயர்வுகள்! பலே பேஷ்! சா(வே)தனைகளுக்கு மன்னர்கள்தான். 

No comments:

Post a Comment