நமது தரைவழி கேபிள்களை தனியாருடன் பகிர்ந்துகொள்வதை நாம் முழுமூச்சுடன் எதிர்த்து வந்திருக்கிறோம். இதுவரை அம்மாதிரி பரிந்துரைகளை நிராகரித்து வந்த பிஎஸ்என்எல் நிர்வாகம், பிட்ரோடா அறிக்கைக்குப் பின் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு கேபிள்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை எடுத்திருப்பதாகப் பத்திரிகைச் செய்தி கூறுகிறது. அதே பத்திரிகை இதுவரை தரைவழி தொடர்புகள் அளிப்பது தனியார்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளதாகவும், இம்முடிவினால் அவர்கள் சிறந்த பிராட்பாண்ட் சேவைகளை அளிப்பது சுலபமாகி விடும் என்றும் எழுதியுள்ளது. ஆக நாம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரே பிரிவான தரை வழி தொடர்புகளையும், பிராட்பாண்ட் இணைப்புகளையும் இழக்கப் போகிறோம். செலவுகள் ஏதுமின்றி தனியார்கள் பெரும் லாபம் அடையப் போகிறார்கள். சும்மா இருக்கும் லைன்களைத் தனியாருக்கு அளிப்பதன் மூலம் பிஎஸ்என்எல்லுக்கு வருமானம் வரும் என்று புரட்டு வாதம் வைக்கப் படுகிறது. இதனால் வரும் இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஒன்று பட்டுப் போராடுவது கட்டாயம். விரிவான செய்திகளுக்கு Click here
No comments:
Post a Comment