FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Thursday, December 8, 2016

BSNL தொழிலாளர்களுக்கு பணித்திறன் அடிப்படையில் ஊதியம்

BSNL தொழிலாளர்களுக்கு பணித்திறன் அடிப்படையில் ஊதியம் வழங்குவது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளதாக BSNL நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான (CMD) திரு. அனுபம் ஸ்ரீவத்ஸவா தெரிவித்துள்ளார்.

BSNL ஊழியர்களுக்கு பணி அடிப்படையில் ஊதியம் வழங்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்படும் என தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் மாதத்தின் முதல் தேதியன்று சம்பளம் கிடைத்துவிடும் என்ற மனநிலையை ஊழியர்கள் மாற்றிக் கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், பணித்திறனுக்கேற்ப ஊதியம் வழங்கும் திட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளதாக BSNL நிறுவனத்தின் CMD திரு. அனுபம் ஸ்ரீவத்ஸவா அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின்படி, அனைவருக்கும் பொதுவான ஊதியமும் சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக ஊக்கத்தொகையும் வழங்கப்படுமெனத் தெரிகிறது.


இத்திட்டம் ஊழியர்களைப் பொறுப்புடன் பணியாற்ற ஊக்கப் படுத்துமெனவும், இது சம்பந்தமான பரிந்துரைகள் மூன்றாவது ஊதிய மாற்றக் குழுவிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாகவும், தற்போது அது சம்பந்தமாக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாகவும் CMD திரு. அனுபம் ஸ்ரீவத்ஸவா கூறியுள்ளார்.