FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Monday, March 31, 2014

கிராக்கிப்படி சரிந்தது - IDA Reduction

1-4-2014 முதல் கிராக்கிப்படி (IDA) யில் 2.1 சதவீதம் சரிவு ஏற்பட்டு, 88.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. விலைவாசிக் குறியீட்டெண் சரிந்ததே இதற்குக் காரணம்.

இதனால், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான சம்பள  பட்டியலில் சில நூறு ரூபாய்கள் வெட்டு விழும்.

ஏறிய விலைவாசி இறங்கியதாகத் தெரியவில்லை. ஆனால், விலைவாசிக் குறியீட்டெண் மட்டும் குறைந்தது எப்படியோ ?

சென்னை அகில இந்திய மாநாடு - 2014 மார்ச் 21 & 22 - காட்சிப் பதிவுகள்

மேடையில் தலைவர்கள் - தமிழக CGM-க்கு மரியாதை

அரங்கம் நிறைந்த காட்சி - சார்பாளர்களின் ஒரு பகுதி
DS/Karaikudi with Tamil Nadu Cir.Secy., Cir.Treasurer & CGMT

காரைக்குடி மாவட்டச் செயலர் கருத்துரை

பொருளாய்வுக் குழுவில் விவாதம்

Monday, March 24, 2014

சென்னை - அகில இந்திய மாநாடு - 21 & 22 மார்ச் 2014

தேசிய BSNL தொழிலாளர் சங்கம் – FNTO வின் அகில இந்திய மாநாடு மார்ச் 21 மற்றும் 22-ம் தேதிகளில் சென்னை, குரோம்பேட்டையிலுள்ள பாலாஜி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.  அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் ஜான்.K தலைமையேற்க, வரவேற்புக் குழுவின் பொதுச் செயலாளரும் சென்னைத் தொலைபேசியின் மாநிலச் செயலாளருமான தோழர் S.லிங்கமூர்த்தி வரவேற்புரையாற்ற, அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் K.ஜெயப்பிரகாஷ் மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

மார்ச் 21 மாலை நடைபெற்ற பொது அரங்கு நிகழ்ச்சியில் FNPO சம்மேளனப் பொதுச் செயலாளர் தோழர் D.தியாகராஜன், INTUC தமிழ்நாடு மாநிலத் தலைவர் தோழர் G.காளன், BSNLEU பொதுச் செயலாளர் தோழர் அபிமன்யு, NFTE பொதுச் செயலாளர் தோழர் சந்தேஷ்வர் சிங், SNEA(I) மத்தியச் சங்கப் பொருளாளர் தோழர் R.ராஜன், AIBSNLEA மத்தியச் சங்க ஆலோசகர் தோழர் V.K.பரமசிவம், BDPA(I) பொதுச் செயலாளர் தோழர் D.D.மிஸ்திரி,  FNTO வின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் K.வள்ளிநாயகம் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

மக்கள் பிரதிநிதிகள் சார்பில் திருநீர்மலை பேரூராட்சித் தலைவர் திருமதி கலைவாணி காமராஜ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு M.கிருஷ்ணசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிர்வாகத்தின் சார்பில், விரைவில் BSNL Board-ன் Director-ஆகப் பொறுப்பேற்க உள்ளவரும் தற்போதைய தமிழ் மாநில முதன்மைப் பொது மேலாளருமான மேஜர் முஹம்மது அஷ்ரப் கான் கலந்துகொண்டு உரையாற்றினார்.

பொருளாய்வுக் குழுவில் செழுமையான விவாதங்களைத் தொடர்ந்து, நிதிநிலை ஆய்வுக்குப் பின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

தோழர் தாமஸ் ஜான்.K அகில இந்தியத் தலைவராகவும், தோழர் K.ஜெயப்பிரகாஷ் பொதுச் செயலாளராகவும், தோழர் B.C.பாத்தக் அகில இந்தியப் பொருளாளராகவும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.


தமிழகத்தின் சார்பில், மாநிலச் செயலாளர் தோழர் D.சந்திரசேகரன் இணைப் பொதுச் செயலாளராகவும், தோழர் N.நீதிநாதன் (சென்னை) உதவிப் பொதுச் செயலாளராகவும், தோழர் A.ஞானசேகரன் (திருச்சி) அமைப்புச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

Tuesday, March 18, 2014

கேட்பாரில்லா வைப்பு நிதி (EPF) ரூ.3000 கோடி

2011-12 நிதியாண்டு வரை தொழிலாளர் வைப்பு நிதியில் சுமார் 3000 கோடி ரூபாய் கேட்பாரற்று (Unclaimed) இருக்கிறதாம். இது 73 இலட்சம் EPF கணக்குகளில் உள்ளதாகக் கூறப்படுகிறது. பழைய கணக்குகள் தொடரப் படாததே இதற்குக் காரணம். ஒப்பந்த ஊழியர்களும் இதர ஊழியர்களும் ஒரு நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனத்திற்கு மாறிச் செல்லும் போது புதிய கணக்குகள் உருவாக்கப் படுகின்றன. இதனால், ஊழியர்களுக்குத் தான் பேரிழப்பு ஏற்படுகிறது.

BSNL போன்ற பெரிய நிறுவனங்களில் ஒப்பந்தக்காரர்கள் மாறுவதாலும், பழைய கணக்குகள் தொடரப்படாமல் புதிய கணக்குகள் உருவாக்கப் படுவதால் இந்த நிலை ஏற்படுகிறது. ஆகவே, ஊழியர்கள்குறிப்பாக  ஒப்பந்த ஊழியர்கள்விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஒப்பந்தக்காரர்கள் மாறினாலும், ஊழியர்களுக்குச் சேரவேண்டிய வைப்பு நிதித் தொகை (EPF Contibution) பழைய கணக்கு எண்ணிலேயே தொடர்ந்து டெபாசிட் செய்யப்பட வேண்டும். அவ்வாறு டெபாசிட் செய்யப் படுகிறதா என்பதை, Principal Employer என்ற முறையில் நிர்வாகமும் கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால், ஏற்கனவே பலதரப்பாலும் சுரண்டப்படும் ஒப்பந்த ஊழியர்கள் மேலும் மேலும் பாதிக்கப் படுவார்கள்.

ஒப்பந்த ஊழியர்களே, உஷார் !

BSNL-ன் அகண்ட அலைவரிசைக்கும் ஆப்பு ?

இந்தியாவில் அகண்ட அலைவரிசை (Broad Band) சேவையில் 144 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஜனவரி மாத இறுதி நிலவரப்படி அகண்ட அலைவரிசை வாடிக்கையாளர் எண்ணிக்கை 5.69 கோடியாக உள்ளது. இதில் BSNL (1.65 கோடி), Airtel(1.15 கோடி), Reliance(0.71 கோடி), Idea(0.63 கோடி), Vodafone(0.56 கோடி) ஆகிய நிறுவனங்களின் பங்கு  மட்டும் 82.57 சதவீதம் என்பது குறிப்பிடத் தக்கது.

ஜனவரி மாதத்தில் தனியார் நிறுவனங்களின் மொபைல் வாடிக்கை யாளர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் முறையே 15.75 லட்சம் மற்றும் 96 ஆயிரம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. Landline இணைப்பு களும் 1 லட்சம் குறைந்துள்ளன. செல்போன் சேவையில் ஏற்பட்டுள்ள எழுச்சியால் லேண்டுலைன் இணைப்புகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தாலும், அகண்ட அலைவரிசை (Broad Band) சேவையைப் பொறுத்த வரை BSNL தான் முன்னிலையில் இருக்கிறதென இறுமாந்திருந்தோம். தற்போதோ, அதற்கும் ஆப்பு வைத்தாகி விட்டது.

கடந்த வருடம் அகண்ட அலைவரிசை (Broad Band) சேவையில் சுமார் 65 சதவீதமாக இருந்த BSNL-ன் பங்கு அதாவது Market share, ஜனவரி மாத நிலவரப்படி 29 சதவீதமாகக் குறைந்துள்ளது.


இப்படியே போனால்….. ?

எழுமின், விழிமின்         சுவாமி விவேகானந்தர்

Monday, March 10, 2014

மார்ச் 8 – சர்வதேச மகளிர் தினம் - International Women's Day

ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே….
-     மகாகவி பாரதியார்

வெள்ளையரை எதிர்த்த வீர மங்கை வேலுநாச்சியார் பிறந்த மண்ணில்
புலியை முறத்தால் விரட்டிய வீரப்பெண்மணிகள் வாழ்ந்த மண்ணில்
பெண்மையை வாழ்த்துவோம் ! பெண்மையைப் போற்றுவோம் !

Let’s spread the message of Empowerment of Women

பெண்களின் அதிகாரத்திற்காக அயராது பாடுபடுவோம் !
பெண்களின் கல்வி மற்றும் உரிமைகளுக்காகப் போராடுவோம் !

அனைத்து தோழியர்களுக்கும்
மகளிர் தின நல்வாழ்த்துகள் !


08/03/2014                               FNTO/KKD.SSA