2011-12 நிதியாண்டு வரை தொழிலாளர் வைப்பு நிதியில் சுமார் 3000 கோடி ரூபாய் கேட்பாரற்று (Unclaimed) இருக்கிறதாம்.
இது 73 இலட்சம் EPF கணக்குகளில்
உள்ளதாகக் கூறப்படுகிறது. பழைய கணக்குகள் தொடரப் படாததே இதற்குக்
காரணம். ஒப்பந்த ஊழியர்களும் இதர ஊழியர்களும் ஒரு நிறுவனத்திலிருந்து
வேறொரு நிறுவனத்திற்கு மாறிச் செல்லும் போது புதிய கணக்குகள் உருவாக்கப் படுகின்றன.
இதனால், ஊழியர்களுக்குத் தான் பேரிழப்பு ஏற்படுகிறது.
BSNL போன்ற பெரிய நிறுவனங்களில் ஒப்பந்தக்காரர்கள் மாறுவதாலும், பழைய கணக்குகள் தொடரப்படாமல் புதிய கணக்குகள் உருவாக்கப் படுவதால் இந்த நிலை
ஏற்படுகிறது. ஆகவே, ஊழியர்கள் –
குறிப்பாக ஒப்பந்த ஊழியர்கள் – விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஒப்பந்தக்காரர்கள்
மாறினாலும்,
ஊழியர்களுக்குச் சேரவேண்டிய வைப்பு நிதித் தொகை (EPF
Contibution) பழைய கணக்கு எண்ணிலேயே தொடர்ந்து டெபாசிட் செய்யப்பட
வேண்டும். அவ்வாறு டெபாசிட் செய்யப் படுகிறதா என்பதை,
Principal Employer என்ற முறையில் நிர்வாகமும் கண்காணிக்க வேண்டும்.
இல்லையென்றால், ஏற்கனவே பலதரப்பாலும் சுரண்டப்படும் ஒப்பந்த ஊழியர்கள்
மேலும் மேலும் பாதிக்கப் படுவார்கள்.
contactor போனஸ்கொடுக்கவில்லை எனில் principal employer தரவேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால் கொடுத்தால் கேஸ் கொடுப்பேன் என்று சொன்னது யார் தோழா? பாலமுருகன் நி. 9443166468
ReplyDelete