FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Tuesday, March 18, 2014

BSNL-ன் அகண்ட அலைவரிசைக்கும் ஆப்பு ?

இந்தியாவில் அகண்ட அலைவரிசை (Broad Band) சேவையில் 144 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஜனவரி மாத இறுதி நிலவரப்படி அகண்ட அலைவரிசை வாடிக்கையாளர் எண்ணிக்கை 5.69 கோடியாக உள்ளது. இதில் BSNL (1.65 கோடி), Airtel(1.15 கோடி), Reliance(0.71 கோடி), Idea(0.63 கோடி), Vodafone(0.56 கோடி) ஆகிய நிறுவனங்களின் பங்கு  மட்டும் 82.57 சதவீதம் என்பது குறிப்பிடத் தக்கது.

ஜனவரி மாதத்தில் தனியார் நிறுவனங்களின் மொபைல் வாடிக்கை யாளர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் முறையே 15.75 லட்சம் மற்றும் 96 ஆயிரம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. Landline இணைப்பு களும் 1 லட்சம் குறைந்துள்ளன. செல்போன் சேவையில் ஏற்பட்டுள்ள எழுச்சியால் லேண்டுலைன் இணைப்புகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தாலும், அகண்ட அலைவரிசை (Broad Band) சேவையைப் பொறுத்த வரை BSNL தான் முன்னிலையில் இருக்கிறதென இறுமாந்திருந்தோம். தற்போதோ, அதற்கும் ஆப்பு வைத்தாகி விட்டது.

கடந்த வருடம் அகண்ட அலைவரிசை (Broad Band) சேவையில் சுமார் 65 சதவீதமாக இருந்த BSNL-ன் பங்கு அதாவது Market share, ஜனவரி மாத நிலவரப்படி 29 சதவீதமாகக் குறைந்துள்ளது.


இப்படியே போனால்….. ?

எழுமின், விழிமின்         சுவாமி விவேகானந்தர்

No comments:

Post a Comment