FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Wednesday, June 9, 2010

காரைக்குடியில் Development மீட்டிங் எனும் சடங்கு



கடமையைச் செய், பலனை எதிர்பாராதே கீதா பதேசம்.
கடமையைச் செய், உரிமையைக் கேள் - FNTO -வின் பாடம்.

            கடமையும் உரிமையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒருவருடைய கடமை இன்னொருவருடைய உரிமையாகும். ஒருவர் தமது கடமையைச் செவ்வனே செய்யும் போது, அது இன்னொருவருடைய உரிமையைப் பாதிக்காது. ஒருவர் தமது கடமையைச் செய்யத் தவறுவதாலும் அல்லது அதைக் காலத்தே செய்யாமல் இழுத்தடிப்பதாலும், அதனால் பாதிக்கப் படுபவர்கள் தமது உரிமைக்காக போராடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

            ஊழியர்கள் கடமையைச் செய்யவில்லையென்று கண்டிக்கும், தண்டிக்கும் அதிகாரிகள் தமது கடமையைச் செவ்வனே செய்யவில்லையென்றால் அவர்களை யார் கண்டிப்பது, தண்டிப்பது?

            எதற்கும் அசைந்து கொடுக்காத நிர்வாகம், யாருக்கோ வந்த விருந்து என்பதைப் போல வந்து போகும் அதிகாரிகள் - விளைவு, உருப்படாத பவர் சப்ளை(UPS) உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு அதிகாரி தனது கடமையைச் சரிவரச் செய்யாததால், இன்னொரு அதிகாரியோ அல்லது ஊழியரோ தனது கடமையையே செய்ய முடியாதபடி சிரமப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.

            தலைவனில்லாக் குடும்பம் தட்டுக்கெடும் என்பதைப் போல, காரைக்குடியின் பரிதாப நிலை. BSNL-ஐக் காப்போம் என்று ஊருக்கு மட்டும் உபதேசம் செய்துவிட்டு, இருப்பதைக்கூட காப்பாற்ற  சரியாகப் பராமரிக்க முடியாத அக்கறையற்ற  பொறுப்பற்ற நிர்வாகம். இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்பட்டு என்ன பயன்? Maintenanceஏ தடுமாறும் போது எதை Development செய்ய?

            சம்பந்தப்பட்டவர்களின் சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் மாற்றம் வராதவரை, Development Meeting என்பது மாதாமாதம் நடக்கும் ஒரு சடங்கு, அவ்வளவே.

09-06-2010.                                                                 FNTO/KKD.SSA

1 comment:

  1. please keep 3 to 4 line english version of tamil news for viewers of other states.

    ReplyDelete