FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Friday, June 11, 2010

EPF நிலுவையும் நிர்வாகத்தின் இழுவையும்.

EPF நிலுவையும் நிர்வாகத்தின் இழுவையும்.

EPF சட்டத்தின் பிரிவு 32-ன் படி EPF சந்தா நிலுவையை ஊழியர்களின் சம்பளத்திலிருந்தோ அல்லது நிலுவைத் தொகையிலிருந்தோ பிடிக்கக்கூடாது. ஒருவேளை பின்தேதியிலிருந்து சந்தா கட்ட வேண்டியிருந்தாலும் கூட, நிர்வாகம்தான் ஊழியர்களது பங்கையும் நிர்வாகத்தின் பங்கையும் சேர்த்து மொத்தமாகக் கட்டவேண்டும்.

எனவேதான், ஏற்கனவே 6500 என்றிருந்த Ceiling-ஐ உயர்த்திய போது ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப் பட்ட சந்தா நிலுவைத்தொகையை PF Commissioner  அலுவலகம் ஏற்கமுடியாதென்று திருப்பிவிட்டது. ஆண்டுகள் பலவானபின்னும் அந்தத் தொகையே ஊழியர்களுக்கு இன்னும் திருப்பித் தரப்படாதபோது, மீண்டும் மீண்டும் தேவையில்லாமல் EPF சந்தா நிலுவைத் தொகையை பிடித்தம் செய்வது சரியல்ல.

நிர்வாகத்தின் இத்தகைய அர்த்தமற்ற, வேண்டாத வேலையால் சம்பள மாற்றத்திற்காக பல ஆண்டுகளாகக் காத்திருந்து - நிலுவைத்தொகையைக் குறைவாகப் பெற்ற - ஊழியர்கள் கொதிப்படைந்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக நமது மாநிலச் செயலர் மாநில நிர்வாகத்திடம் ஏற்கனவே விவாதித்திருக்கிறார்.

ஆகவே, தேவையில்லாமல் ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட EPF சந்தா நிலுவைத்தொகையை மொத்தமாக உடனடியாகத் திருப்பி வழங்க வேண்டும். இல்லையேல், அனைத்து ஊழியர்களையும் திரட்டி விரைவில் ஒரு போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கை செய்கிறோம்.

11-09-2010.                                       FNTO/KKD.SSA

No comments:

Post a Comment