FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Monday, June 20, 2016

3-வது ஊதிய மாற்றக் குழு – 3rd PRC for CPSEs

மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்துவதற்கான 3-வது ஊதிய மாற்றக் குழுவை (3rd Pay Revision Committee) மத்திய அரசு அமைத்து அதற்கான அறிவிப்பு அரசிதழில் (Gazette Notification) வெளியிடப் பட்டுள்ளது. இக்குழு ஆறு மாதங்களில் தனது பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். இப்பரிந்துரைகளின் மீதான உத்தரவு 1-1-2017 முதல் அமல்படுத்தப் படும்.

BSNL நிறுவனத்தைப் பொறுத்த வரையில், அதிகாரிகளின் சம்பளமானது மேற்படி ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்டு நேரடியாக உத்தரவு வெளியிடப் படும்.

ஆனால், BSNL தொழிலாளர்களைப் பொறுத்த வரையில், நிர்வாகமும் அங்கீகரிக்கப் பட்ட சங்கமும் கலந்து பேசி (Negotiations) ஊதிய உடன்பாடு (Wage Agreement) எட்டப்பட வேண்டும். அதன்பிறகு தான் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு அமல்படுத்தப் படும்.

கடந்தமுறை, 1-1-2007 முதல் அமல்படுத்தப் பட்ட இரண்டாவது சம்பள உயர்வின் போது, அப்போதிருந்த ஒரே அங்கீகரிக்கப் பட்ட சங்கமானது ஏறத்தாழ மூன்றரை வருடங்கள் காலதாமதத்திற்குப் பின் 7-5-2010-ல் தான் ஊதிய உடன்பாடு காண முடிந்தது. அதுவும், அனாமலிகளுக்கு தீர்வற்ற, அலவன்ஸ்களில் முன்னேற்றமற்ற அரைகுறை உடன்பாடு தான், முழுமையான ஊதிய உடன்பாடு அல்ல. அந்தக் காலகட்டத்தில் BSNL லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த போதே அதுபோன்ற நிலைமை.

இப்போதோ, BSNL நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இம்முறை, இரண்டு அங்கீகரிக்கப் பட்ட சங்கங்களும் என்ன செய்யக் காத்திருக்கின்றனவோ ?