FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Thursday, May 19, 2016

துணிந்து நில், தொடர்ந்து செல், தோல்வி கிடையாது தோழா !

அகில இந்திய அளவில் 81,195 வாக்குகளை (49.56%) பெற்று BSNLEU முதலிடத்தையும், 52,367 வாக்குகளை (31.97%) பெற்று NFTE இரண்டாமிடத்தையும், 8,697 வாக்குகளை (5.31%) பெற்று FNTO மூன்றாமிடத்தையும், 4,846 வாக்குகளை (2.96%) பெற்று BTEU நான்காமிடத்தையும் பெற்றுள்ளது.
தமிழகத்தில் 5,584 வாக்குகளை (46.15%) பெற்று NFTE முதலிடத்தையும் 4,967 வாக்குகளை (41.05%) பெற்று BSNLEU இரண்டாமிடத்தையும், 964 வாக்குகளை (7.97%) பெற்று FNTO மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது.
காரைக்குடியில் 233 வாக்குகளை (59.44%) பெற்று NFTE முதலிடத்தையும் 84 வாக்குகளை (21.43%) பெற்று FNTO இரண்டாமிடத்தையும், 64 வாக்குகளை (16.33%) பெற்று BSNLEU மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது.
BSNL தலைமையகமான கார்ப்பரேட் அலுவலகத்தில் 154 வாக்குகளை (32.08%) பெற்று FNTO முதலிடத்தையும், 152 வாக்குகளை (31.66%) பெற்று NFTE இரண்டாமிடத்தையும், 90 வாக்குகளை (18.75%) பெற்று BSNLEU மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
கேரளா, ஜார்கண்ட் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் FNTO இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத் தக்கதாகும்.
கேரளாவில் 6370 வாக்குகளை பெற்று BSNLEU முதலிடத்தையும், 1434 வாக்குகளை பெற்று FNTO இரண்டாமிடத்தையும், 631 வாக்குகளை பெற்று NFTE மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது.
அதே போல, ஜார்கண்ட்டில் 1098 வாக்குகளை பெற்று NFTE முதலிடத்தையும், 416 வாக்குகளை பெற்று FNTO இரண்டாமிடத்தையும், 406 வாக்குகளை பெற்று BSNLEU மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது.
BSNLEU –வும் NFTE –யும் FNTO உறுப்பினர்களைத் தங்களது இலக்காக்கிக் கொண்டு இல்லந்தோறும் சென்று ஜெயிக்கும் சங்கத்திற்கு வாக்களியுங்கள் என்று கேட்டு பல்முனைத் தாக்குதல்களில் ஈடுபட்டு அவர்களது வாக்குகளைக் கவரக் கடும் பிரயத்தனம் செய்தனர்.
இவற்றையெல்லாம் புறந்தள்ளி, இந்தத் தேர்தலில் FNTO காணாமல் போய்விடும் என்ற பலரது கனவுகளையும்/ஆரூடங்களையும் பொய்யாக்கி, 8,697 வாக்குகளைப் பெற்று FNTO மூன்றாமிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதானது - தேசியச் சங்கத்தின் மீது நம் தோழர்களுக்கு இருக்கும் உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடேயன்றி வேறில்லை.
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும், போகும். ஆனால், நாற்பத்தெட்டாண்டு காலப் பாரம்பரியம் கொண்ட, ஊழியர்களின் முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பாடுபட்டு வரும் தேசியச் சங்கம் - தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல், தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் என்ற தோழர்களின் நம்பிக்கை வீண்போகாது.
துரோகங்களைப் புறந்தள்ளி, தேசியச் சங்கத்தின் பிதாமகர் K.R. காட்டிய வழியில் தொழிற்சங்கப் பயணம் தொடரும்.

வீறு நடை போடுவோம் ! அனைவருக்கும் வீர வாழ்த்துக்கள் !