FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Friday, August 23, 2013

தமிழ் மாநில நிர்வாகத்துடன் சந்திப்பு - 20/08/2013

கடந்த 20-08-2013 அன்று சென்னையில் CGM திரு முஹம்மது அஸ்ரப் கான் அவர்களை FNTO-வின் உதவிப்பொதுச் செயலரும் தமிழ்மாநிலச் செயலருமான தோழர் D.சந்திரசேகரன், மாநிலத் தலைவர் தோழர் அப்துல் வஹாப், மாநிலப் பொருளாளர் தோழர் நீதிநாதன், மாநில அமைப்புச் செயலர் தோழர் J.அனந்தகிருஷ்ணன், காரைக்குடி மாவட்டச் செயலர் தோழர் G.முத்துக்குமரன்சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தோழர்கள் P.மதியழகன் மற்றும் K.பாலன் ஆகியோர் சந்தித்து சேலம் மாவட்ட பழிவாங்கும் மாற்றல்கள் குறித்தும் இதர பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர். GM (Admn.) திருமதி இராதா அவர்களும் உடனிருந்தார்.

அதேபோல, DGM (Admn.) திரு வேலப்பன் அவர்களையும் சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப் பட்டது. JTO போட்டித் தேர்வு வினாத்தாள் குறித்து ஆராய அமைக்கப் பட்ட கமிட்டி தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமெனத் தெரிகிறது.



அதே 20-08-2013 அன்று சென்னையில் PGM (Finance) திரு G. ரவி அவர்களையும், DGM (Finance) திரு நடேசன் அவர்களையும் மற்றும் CAO (Finance)  திரு T.S.கண்ணன் அவர்களையும் தனித்தனியே சந்தித்த FNTO-வின் உதவிப்பொதுச் செயலரும் தமிழ்மாநிலச் செயலருமான தோழர் D.சந்திரசேகரன், மாநிலத் தலைவர் தோழர் அப்துல் வஹாப், மாநிலப் பொருளாளர் தோழர் நீதிநாதன், காரைக்குடி மாவட்டச் செயலர் தோழர் G.முத்துக்குமரன்ஆகியோர்  பல்வேறு Pay fixation  பிரச்சினைகள் குறித்தும் மெடிக்கல் பில் போன்ற இதர பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர். தோழர் V.ராமராஜ், TTA-வின் Pay fixation  பிரச்சினையில் சாதகமான முடிவெடுக்கப் பட்டுள்ளது

No comments:

Post a Comment