காரைக்குடி மாவட்ட நிர்வாகமே
!
அங்கீகரிக்கப்பட்ட
சங்கங்களின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி
அப்பாவி
தொழிலாளர்களை வஞ்சிக்காதே !
மாற்றுச்
சங்க உறுப்பினர்களுக்கு மாற்றல்கள் வழங்குவதில்
மாற்றாந்தாய்
மனப்பான்மையோடு நடக்காதே !
உண்மையாக
உழைக்கும் FNTO உறுப்பினர்களின்
உள்ளக்
குமுறல்களுக்கு இடங்கொடுக்காதே,
உற்பத்தித்
திறனைக் கெடுக்காதே !
TTA கேடரில் காலிப் பணியிடங்களை நிர்ணயிப்பதிலும்
விருப்பத்திற்கேற்ப
மாற்றல்கள் வழங்குவதிலும்
ஒளிவுமறைவின்றியும்
பாரபட்சமின்றியும் நடந்துகாட்டு !
FNTO
உறுப்பினர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தாமல்
சட்டத்தின்
முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டு !
மாற்றல்
மிட்டாய் காட்டும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின்
ஆள்பிடிப்பு
வேலைகளுக்குத் துணைபோகாதே !
தொழிலாளர்களைப்
போராட்டத்துக்கு தூண்டாதே !
எளியோரைத்
தாழ்த்தி வலியோரை வாழ்த்தாதே !
வல்லான்
வகுத்ததே வாய்க்கால் என்பது அந்தக்காலம்.
ஏழை
அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் !
TTA கேடரில் மாற்றல்கள் வழங்கியதில் இழைக்கப்
பட்ட அநீதியைத் தட்டிக்கேட்டு காரைக்குடியில் மூன்று நாட்கள் போராடியதும் அன்றைய
GM அம்மாவைக் (கண்) கலங்க
வைத்ததும் வரலாறு.
அதேபோல,
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த TM தோழர் ரத்தினசாமி
பாதிக்கப்பட்ட போது சென்னையில் நடந்த போராட்டத்தில் மாநில அலுவலகமே “FNTO-வா, இப்படியா ?” என வியந்ததும்,
அன்றைய தமிழக CGM (ஏக)அய்யாவைக்
கதி கலங்கடித்ததும் வரலாறு.
சாது
மிரண்டால் காடு கொள்ளாது என்பது பழமொழி!
எங்களாலும்
உக்கிரத்துடன் போராட, வென்றெடுக்க முடியும் !
No comments:
Post a Comment