FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Thursday, August 15, 2013

தலைநகரச் செய்திகள் – New Delhi News

BSNL-ஐ சீரமைக்க National Convention:

கடந்த 3-8-2013 அன்று புதுடெல்லியில் BSNL தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் தேசிய கருத்தரங்கம் (National Convention of BSNL Executives and Non-Executives) நடைபெற்றது. தொலைத்தொடர்பில் 100 சத அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்ட மத்திய அரசின் கொள்கைகளை எதிர்ப்பது  குறித்தும் BSNL-ஐ சீரமைப்பது குறித்தும் சீரிய விவாதங்கள் நடத்தப் பட்டன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கருத்தரங்கில் பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தமது வாதங்களை முன்வைத்தனர். INTUC சார்பில் தோழர் தாமஸ் K. ஜான் அவர்களும் FNTO-வின் சார்பில் பொதுச் செயலர் தோழர் K.ஜெயப்பிரகாஷ் அவர்களும் உரையாற்றினர். FNTO-வின் மத்தியச் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட பல்வேறு சங்கங்களின் சார்பில் சுமார் 1000 சார்பாளர்கள் கலந்து கொண்டனர். பழுதற்ற தரமான தொலைத்தொடர்பு சேவைகளை அளிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களை வசப்படுத்துவோம் என்ற பிரகடனத்தைச் செயல்படுத்த வலியுறுத்தப் பட்டது.

மத்தியச் செயற்குழு:

FNTO-வின் மத்தியச் செயற்குழுக் கூட்டம் கடந்த 3 & 4-8-2013 தேதிகளில் புதுடெல்லியில் நமது அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் K. ஜான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. செயற்குழுவில் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விரிவான விவாதங்கள் இடம்பெற்றன. இறுதியில், அடுத்த அகில இந்திய மாநாட்டை சென்னையில் நடத்துவதென முடிவு செய்யப் பட்டது.

அதிகாரிகளுடன் சந்திப்பு:

கடந்த 5-8-2013 அன்று புதுடெல்லியில் DOT- யின் Member (Services) திரு S.C.மிஸ்ரா அவர்களை FNTO-வின் அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் K. ஜான், பொதுச் செயலர் தோழர் ஜெயப்பிரகாஷ், உதவிப்பொதுச் செயலர் தோழர் D.D.மிஸ்திரி, தமிழ்மாநிலச் செயலர் தோழர் சந்திரசேகரன், பீஹார் மாநிலச் செயலர் தோழர் R.P.சின்ஹா, ஜார்கண்ட் மாநிலச் செயலர் தோழர் சத்திரபால் ஆகியோர் சந்தித்து விருப்ப ஓய்வுத் திட்டம் (VRS), MTNL & BSNL இணைப்பு, ஓய்வூதியத்தை திருத்தியமைத்தல் போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்

கடந்த 6-8-2013 அன்று புதுடெல்லி BSNL கார்ப்பரேட் அலுவலகத்தில் GM(SR) திரு நீரஜ் வர்மா அவர்களை FNTO-வின் அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் K. ஜான், பொதுச் செயலர் தோழர் K.ஜெயப்பிரகாஷ், உதவிப்பொதுச் செயலர் தோழர் D.D.மிஸ்திரி, தமிழ்மாநிலச் செயலர் தோழர் சந்திரசேகரன், அ.இ.துணைத் தலைவர் தோழர் V.N.ரத்தோட் ஆகியோர் சந்தித்து எரிச்சலூட்டும் மாற்றல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர்.


அதே 6-8-2013 அன்று புதுடெல்லி BSNL கார்ப்பரேட் அலுவலகத்தில் Director (Finance) திரு K.C.G.K.பிள்ளை அவர்களை FNTO-வின் அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் K. ஜான், பொதுச் செயலர் தோழர் K.ஜெயப்பிரகாஷ், உதவிப்பொதுச் செயலர் தோழர் D.D.மிஸ்திரி, தமிழ்மாநிலச் செயலர் தோழர் சந்திரசேகரன், அ.இ.துணைத் தலைவர் தோழர் V.N.ரத்தோட் ஆகியோர் சந்தித்து 78.2% IDA சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் மெடிக்கல் அலவன்ஸ் குறித்தும் விவாதித்தனர்.

No comments:

Post a Comment