காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்ட தேசிய BSNL தொழிலாளர் சங்கம்
FNTO-வின் சார்பில் முப்பெரும் விழா 10/08/2013 அன்று காரைக்குடி GM அலுவலக வளாகத்தில்
சிறப்பாக நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் தோழர்
T.S.இன்னாசி முத்து தலைமை வகிக்க, மாநிலத் துனைத் தலைவர்
தோழர் S.குருவன், மாநில உதவிச் செயலர்
தோழர் S.கிருஷ்ணமூர்த்தி, மாநில அமைப்புச்
செயலர் தோழர் N.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலர் தோழர் G.முத்துக்குமரன் வரவேற்று முப்பெரும் விழாவைத் துவக்கி வைக்க, முன்னாள் மாவட்டச்
செயலர்கள் தோழர் M.கணபதி, தோழர்
B.மனோகரன் மற்றும் மதுரை மாவட்டச் செயலர் தோழர் S.முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிர்வாகத்தின் சார்பில்
கலந்துகொண்டு சிறப்பித்த உயர்திரு S.ஜெயச்சந்திரன்,
DGM(A) அவர்கள் ”இன்றைய சூழ்நிலையில் BSNL-ஐ
நிலைநிறுத்த நாம் செய்யவேண்டுவது என்ன” என்பது குறித்து புள்ளி விபரங்களோடு நீண்டதொரு
சிறப்புரையாற்றினார்.
பணியிலிருந்து ஓய்வு பெற்ற தோழர்கள்
பாராட்டி கெளரவிக்கப் பட்டனர். BDPA(I) ஓய்வூதியர் சங்கம் அமைக்கப்பெற்று
நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். கிளைச்செயலர்களும் மாவட்ட நிர்வாகிகளும்
மாவட்டச் செயற்குவில் பங்குகொண்டு விவாதங்களைச் செழுமையாக்கினர். அடுத்த மாவட்ட
மாநாட்டை சிவகங்கை மற்றும் மானாமதுரை கிளைச் சங்கங்கள் இணைந்து நடத்துவதெனவும்
அதற்குள் கிளை மாநாடுகள் நடத்தி முடிக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப் பட்டது.
இறுதியாக,
தமிழ் மாநிலச் செயலர் தோழர் D.சந்திரசேகரன் எழுச்சியுரையாற்ற, முப்பெரும் விழா இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment