10-08-2013 அன்று காரைக்குடியில் நடைபெற்ற FNTO மாவட்டச் செயற்குழுக்
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்:
1.
BSNL-ன் நிதியாதாரம் குறைந்து கொண்டே வரும் இவ்வேளையில்,
அதிகாரிகளும் தொழிலாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அனாவசிய செலவுகளைக்
குறைத்து, வருவாயைப் பெருக்குவதற்காக இன்னும் கடுமையாக உழைக்க
வேண்டுமென்று இச்செயற்குழு அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.
2.
காண்ட்ராக்ட் முறையில் Lines & Cables வேலைகளைச் செயல்படுத்துவதன் மூலமாக ஏற்படும் அதிகபட்ச செலவுகளைத் தவிர்ப்பதற்கு,
முன்பிருந்த முறையான ACE-3 அக்கவுண்ட் முறையை மீண்டும்
கொண்டுவர நிர்வாகத்தை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
3.
விருப்ப மாற்றல் கேட்டு நீண்ட நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கும்
டெலிகாம் மெக்கானிக் தோழர்களின் மாற்றல் கோரிக்கைகளை விரைந்து தீர்த்து வைக்குமாறு
மாவட்ட நிர்வாகத்தை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
4.
அதேபோல விருப்ப மாற்றல் கேட்டு நீண்ட நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கும் TTA தோழர்களின் மாற்றல் கோரிக்கைகளையும் விரைந்து தீர்த்து வைக்குமாறு மாவட்ட நிர்வாகத்தை
இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
5.
விரைவில் TTA பயிற்சி முடித்து பதவி உயர்வு பெற இருக்கும்
தோழர்களுக்கு அதிக பாதிப்புகளை எற்படுத்தா வண்ணம் பணியிடங்களை முடிவு செய்யுமாறும்,
அவ்வாறு பணியிடங்களை முடிவு செய்யும்போது அவர்கள் TTA போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற சீனியாரிட்டியின் அடிப்படையிலேயே முடிவு செய்ய
வேண்டுமெனவும் மாவட்ட நிர்வாகத்தை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
6.
காண்ட்ராக்டர் மூலமாக Lines & Cables வேலைகளைச் செயல்படுத்துவதற்காக நியமிக்கப் பட்டிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களை
தலமட்ட அதிகாரிகள் முறையாகப் பயன்படுத்தவும், வயது முதிர்ந்த
டெலிகாம் மெக்கானிக் தோழர்களின் பழுது நீக்கல் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஒப்பந்தத்
தொழிலாளர்களை அனுப்பவும் நிர்வாகத்தை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
No comments:
Post a Comment