FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Monday, March 24, 2014

சென்னை - அகில இந்திய மாநாடு - 21 & 22 மார்ச் 2014

தேசிய BSNL தொழிலாளர் சங்கம் – FNTO வின் அகில இந்திய மாநாடு மார்ச் 21 மற்றும் 22-ம் தேதிகளில் சென்னை, குரோம்பேட்டையிலுள்ள பாலாஜி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.  அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் ஜான்.K தலைமையேற்க, வரவேற்புக் குழுவின் பொதுச் செயலாளரும் சென்னைத் தொலைபேசியின் மாநிலச் செயலாளருமான தோழர் S.லிங்கமூர்த்தி வரவேற்புரையாற்ற, அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் K.ஜெயப்பிரகாஷ் மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

மார்ச் 21 மாலை நடைபெற்ற பொது அரங்கு நிகழ்ச்சியில் FNPO சம்மேளனப் பொதுச் செயலாளர் தோழர் D.தியாகராஜன், INTUC தமிழ்நாடு மாநிலத் தலைவர் தோழர் G.காளன், BSNLEU பொதுச் செயலாளர் தோழர் அபிமன்யு, NFTE பொதுச் செயலாளர் தோழர் சந்தேஷ்வர் சிங், SNEA(I) மத்தியச் சங்கப் பொருளாளர் தோழர் R.ராஜன், AIBSNLEA மத்தியச் சங்க ஆலோசகர் தோழர் V.K.பரமசிவம், BDPA(I) பொதுச் செயலாளர் தோழர் D.D.மிஸ்திரி,  FNTO வின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் K.வள்ளிநாயகம் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

மக்கள் பிரதிநிதிகள் சார்பில் திருநீர்மலை பேரூராட்சித் தலைவர் திருமதி கலைவாணி காமராஜ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு M.கிருஷ்ணசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிர்வாகத்தின் சார்பில், விரைவில் BSNL Board-ன் Director-ஆகப் பொறுப்பேற்க உள்ளவரும் தற்போதைய தமிழ் மாநில முதன்மைப் பொது மேலாளருமான மேஜர் முஹம்மது அஷ்ரப் கான் கலந்துகொண்டு உரையாற்றினார்.

பொருளாய்வுக் குழுவில் செழுமையான விவாதங்களைத் தொடர்ந்து, நிதிநிலை ஆய்வுக்குப் பின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

தோழர் தாமஸ் ஜான்.K அகில இந்தியத் தலைவராகவும், தோழர் K.ஜெயப்பிரகாஷ் பொதுச் செயலாளராகவும், தோழர் B.C.பாத்தக் அகில இந்தியப் பொருளாளராகவும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.


தமிழகத்தின் சார்பில், மாநிலச் செயலாளர் தோழர் D.சந்திரசேகரன் இணைப் பொதுச் செயலாளராகவும், தோழர் N.நீதிநாதன் (சென்னை) உதவிப் பொதுச் செயலாளராகவும், தோழர் A.ஞானசேகரன் (திருச்சி) அமைப்புச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

No comments:

Post a Comment