FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Wednesday, January 27, 2010

BSNLEU குற்றச்சாட்டுக்களுக்கு பொதுச்செயலர் பதில்


FNTOமீது BSNLEU குற்றச்சாட்டுக்களுக்கு
நமது பொதுச்செயலர் வள்ளியின் பதில்கள்.



ஜனவரி 10ம் தேதியிட்ட டெலிகுருசேடரிலும், அவர்கள் இணையதளத்திலும் FNTO மீது BSNLEU சில குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ளது. அங்கீகரிக்கப் பட்ட சங்கத்துக்கு, எப்போதெல்லாம் அவர்கள் முக்கியமான ஊழியர் பிரச்சினைகளில் தவறிழைக்கிறார்களோ, அப்போதெல்லாம், நம் மீது குறைகள் சொல்லி, அவர்கள் தவறுகளிலிருந்து ஊழியர்கள் கவனத்தைத் திசை திருப்புவது என்பது வாடிக்கை. ஆனாலும்கூட இப்போது நம் மீது சொல்லப்பட்டிருக்கும் குற்றச் சாட்டுக்களுக்கு நாம் கண்டிப்பாய் பதில் அளிக்க கடமைப் பட்டிருக்கிறோம். ஊழியர்கள் உண்மைகளை அறிய இது அவசியமானது


Strike against corporatization of DOT into BSNL

 DOTயை கார்ப்பரேஷனாக்க யத்தனித்தபோது அன்றிருந்த 3 சம்மேளனங்கள் பல போராட்டங்களை நடத்தின என்பதும், கார்ப்பரேஷனாவது தவிர்க்கமுடியாத நிலையில் மூன்று சம்மேளனங்களும் ஒன்றிணைந்து 3 நாட்கள் ஸ்ட்ரைக் நடத்தி, அரசு பென்ஷன், வேலைக்கு உத்தரவாதம், BSNL நன்கு செயல்பட அரசிடமிருந்து நிதி ஆதாரங்கள், சில ஊழியர் பிரச்சினைகள் ஆகியவற்றை வெற்றிகரமாகப் பெற்றன என்பது மறுக்க முடியாத சரித்திரம். அன்று இதே BSNLEU தலைமையின் கீழ் இருந்த AITEU(N) மற்றும் ஒன்றிரண்டு சங்கங்கள் ஊழியருக்கு துரோகமிழைத்த வரலாறுகளை மறைத்து இன்று பொய்களை அள்ளி வீசுகிறார்கள். (அவை எடுபடாது என்று தெரிந்தும்)

Joint forum resolution to revert back to DOT



ITS அதிகாரிகளுக்கு ஒருவிதமாகவும் மற்றவர்களுக்கு ஒருவிதமாகவும் அரசின் பாரபட்சமான போக்கைக் கண்டித்து BSNLஐ DOTயாக மாற்றக் கோரி தீர்மானம் இயற்றப்பட்டது. அதில் நாமும் ஒருவர். பி எஸ் என் எல் ஊழியர்களை மீண்டும் DOT ஊழியர்களாக மாற்றக் கோரினோம். ப்ரசார் பாரதியில் இப்படி நடந்து முன் உதாரணம் உள்ளது.தீர்மானத்தை வலியுறுத்தி மேல் நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய பொறுப்பு அந்த Joint Forum, மற்றும் அதன் கன்வீனரான BSNLEU பொதுச்செயலரது கடமை. ஏன் செய்யவில்லை? ITS/ Government உடன் ஏதும் மறைமுக உடன்பாடா? இப்போதுகூட காலதாமதமாகி விடவில்லை. மத்திய அரசு ஊழியருக்கும் கீழாக நாம் சம்பளம் பெறப்போகும் அவலத்தை எதிர்த்து அந்தத் தீர்மானத்தின்மீது மேல் நடவடிக்கை எடுக்கலாமே? செய்வாரா? முதல் சம்பள கமிஷனில் குறைந்த பட்ச ஊதியமாக ரூ.4400/ கேட்கப்பட்டதும் அதற்காக மற்ற சம்மேளனங்களுடன் எப் என் டீ ஓவும் இணைந்து முயற்சித்ததை அவர்களால் மறைக்க/மறுக்க முடியாது.


Settlement of Anomaly


அனாமலி பிரச்சினை தீராததற்கு FNTO, NFTE பொறுப்பாக முடியாது. இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 2005லேயே தக்க தீர்வுகள் நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டு, அவைகளை நிர்வாகமும் ஏற்றுக்கொண்டு DOTக்கு அனுப்பியது. தொடர் முயற்சிகள் இல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் மெத்தனப் போக்கினால் அதை ஏற்காமல் DOT திருப்பி அனுப்பியது. அதை மீண்டும் தகுந்த விளக்கங்களுடன் DOTயை ஏற்கவைக்காமல், ஸ்பெஷல் பே என்று அவசரமாக முடிவு செய்து தவறிழைத்தது. ஆக அனாமலி பிரச்சினை தீரவில்லை. இதை மறைப்பதற்காக நம் மீது பழி சொல்கிறார்கள்.



Why FNTO did not join   negotiation or struggle for 2nd Wage Revision.

ஊதிய உயர்வு பிரச்சினைகளில், வரவிருந்த தேர்தலை மனதில் கொண்டு, எல்லாப் பெருமைகளும் தனக்கே வரவேண்டும் என்ற குறுகிய நோக்கில், நம்முடன் பிரச்சினைகள், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள், அத்தீர்வுகளுக்கான போராட்டங்கள் என எதையுமே நம்மிடம் பேச அவர்கள் மறுத்ததால் இணைந்து செயல்படமுடியவில்லை. 2009தேர்தல் முடிந்தபின்னும்,நமது ஒத்துழைப்பை நல்குவதாக நாம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள், நமது ஊழியர்களை மாற்றுதல் செய்வது, நமது சங்கப் பலகைகளை அகற்றவைப்பது என்று செயல்பட்டார்கள். அவர்கள் நடத்திய 48 மணி நேர வேலைநிறுத்தம் பற்றி எல்லாவற்றையும் முடிவெடுத்த பின்னர், நமக்கு ஒரு கடிதம் மட்டும் அனுப்பினார்கள். தேதியை மாற்றி, கோரிக்கைகளை சேர்ந்து முடிவெடுத்துப் போராடலாம் என்ற நமது வேண்டுகோள் ஏற்கப் படவில்லை.

Minimum pay settled in 1st wage revision

நமது முதலாவது ஊதியக் குழுவிடம் நாம் வைத்த குறைந்த பட்ச அடிப்படைச் சம்பளம் ரூ 4400 என்பதை அன்றிருந்த மூன்று சம்மேளனங்களும் ஒன்றுபட்டு நின்றதன் காரணமாக ரூ 4000 எனப் பெற முடிந்தது. இதற்காக முதல் தேர்தலையே அப்போது ஒத்திவைத்தோம். ஆனால் இன்று அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் போக்கினால், குறைந்த பட்ச அடிப்படைச் சம்பளமாக நாம் பெற்றிருக்கவேண்டிய ரூ.14000 அல்லது ரூ.12500 என்பதைப் பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.


Minimum pay settled in 1st wage revision


ஜாயிண்ட் போரம், சில அரசியல் நோக்கங்களுடன் சிலருக்கு மட்டும் ஆதரவாகச் செயல்பட ஆரம்பித்தது. நம் மீது தொடர் தாக்குதல்கள் அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தால் நடத்தப்பட்டபோது அதில் தலையிட்டு நியாயமான நடவடிக்கைகள் எடுக்காமல், அது FNTO – BSNLEU விற்கு இடையேயான தனிப்பட்ட விஷயம் என்று ஒதுங்கிக்கொண்டது. இதனாலேயே நாமும், என் எப் டீ ஈயும் அதை விட்டு விலக நேர்ந்தது. BSNLEU மற்றும் சில சங்கங்களின் நோக்கங்களுக்காகவே செயல்படும் அந்த அமைப்பு, FNTO,NFTE விலகியபிறகு எந்தவிதமான பெரிய போராட்டங்களையும் நடத்த முடியவில்லையே? ஊழியர்களுக்கு உண்மைகள் தெரியும்.


Whether FNTO criticism is against any individual, unethical and abusive?


கண்டிப்பாக இதுவரை நாம் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு தலைவரையும் விமர்சித்ததில்லை. அங்கீகரிக்கப்பட்ட சங்கம் மற்றும் நிர்வாகத்தின் தவறுகளை மட்டுமே நாம் விமர்சிக்கிறோம். இதைத் தாங்க முடியாத அங்கீகரிக்கப்பட்ட சங்கம் நாம் புழுதி வாரித் தூற்றுவதாகச் சொல்கிறது. நமது விமர்சனங்கள் நேரடியான, நியாயமான, நாகரீகமான விமரிசனங்கள் என்று ஊழியர்களுக்குத் தெரியும். அதனாலேயே தினமும் நமது இணைய தளத்துக்கு அதிகாரிகள் முதல் அனைவரும் வந்து உண்மைகளைத் தெரிந்துகொள்கிறார்கள் என்பதை அந்த சங்கத்தால் ஜீரணிக்கமுடியவில்லை. ஆனால் ஊழியர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் இரண்டாவது சம்பள உடன்பாடு, மற்றும் பதவி உயர்வுகள் ஆகியவற்றில் அடைந்திருக்கும் ஏமாற்றமும் விரக்தியும் எதிர் வரும் தேர்தல்களில் நிச்சயம் பிரதிபலித்து அவர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும்.

2009 ஜனவரியில் BSNLலின் நிதி நிலை மிக நல்ல நிலையில் இருக்கும்போது ஊதிய உயர்வு பற்றி சிறப்பாக வாதிட்டு ஊழியர்களுக்கு நன்மை செய்திருக்கக் கூடிய ஒரு பொன்னான தருணத்தைப் பாழாக்கிவிட்டு எந்தவித லாபமும் இல்லாத ஒரு வெற்று உடன்பாட்டை 2010 ஜனவரியில் கண்ட அங்கீகரிக்கப் பட்ட சங்கம் மற்றவர்களைக் குற்றம் சொல்கிறது.

இப்போதும்கூட, பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பல ஊழியர் பிரச்சினைகள் நிலுவையில்தான் உள்ளன. தவறுகளைத் திருத்திக்கொள்வதில் தாமதம் என்பது கிடையாது. இப்போதாவது, BSNLEU தங்களையே மறுபரிசீலனை செய்துகொண்டு தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் செய்வார்களா?




No comments:

Post a Comment