கோடிக்கணக்கான தமிழக மக்களாலும் அதிமுக தொண்டர்களாலும் புரட்சித் தலைவி என்றும் அம்மா என்றும் அன்போடு அழைக்கப் பட்ட அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம்.
சந்தியாவின் மகளாகப் பிறந்து இந்தியாவின் மகளாக இறந்த
ஜெயலலிதா அவர்கள் துணிச்சல் மிக்க, ஆற்றல் நிறைந்த, போர்க்குணம் படைத்த வீரப் பெண்மணி
ஆவார்.
ஆணாதிக்கம் மிகுந்த அரசியலில் தனியொரு பெண்மணியாக
நின்று பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு சாதனைகள் பல புரிந்தவர், சரித்திரம் படைத்தவர்.
சினிமாவிலும் அரசியலிலும் உச்சத்தை தொட்டவர். அவரது
மறைவு தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது
என்றால் அது மிகையாகாது.