FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Saturday, March 13, 2010

B S N L

தொலைக் காட்சிகளில் சிவாஜி வாரம், எம்ஜிஆர் வாரம் என்று போடுவதைப் போல சென்ற வாரம் முழுவதும் ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு பிஎஸ்என்எல் வாரம். (தமிழ் பத்திரிகைகளுக்கு, பாவம் நித்யானந்தாக்களுக்கே பக்கங்கள் காணவில்லை. பிஎஸ்என்எல் பற்றி எழுதினால் வியாபாரத்துக்கு ஆகாது). எகனாமிக் டைம்ஸ், பிஸினஸ்லைன், பிஸினஸ்-ஸ்டாண்டர்டு இவைகளுக்குக் கொண்டாட்டமோ கொண்டாட்டம். தினசரி பிஎஸ்என்எல் பற்றி செய்தி வெளியிட்டு, அது தனியார் மயமாவதில் தங்களுக்கு உள்ள அதீத அக்கறையை வெளிப் படுத்தின. கடலூரார் தினம் வெளியிட்ட பத்திரிகை செய்திகளை தொடர்ந்து படித்தவர்களுக்கு ஒரு விஷயம் கண்டிப்பாக மனதை உறுத்தியிருக்கும். நேரடியாக பாதிக்கப் படப் போகிற நமக்கு செய்திகள் வருவதற்கு முன்பேயே இந்த ஊடகங்களுக்கு செய்திகள் கிடைப்பதும், அதன் பின்னேயே நமது தொழிற்சங்கத் தலைமைகளுக்கு அவை பற்றித் தெரிய வருவதும் இந்த துறையை நேசிப்பவர்களுக்கு மிக மன வேதனை அளிப்பதாகும். பிட்ரோடா கமிட்டி அறிக்கை மீது பிஎஸ்என்எல் போர்டும், தொலைதொடர்பு அமைச்சர் மற்றும் அமைச்சகமும் தினசரி ஒரு முரண்பாடான அறிக்கையை வெளியிடுவதும் ஊழியர் மத்தியில் குழப்பங்களை உருவாக்குவதாகவே உள்ளது. ஆக மொத்தத்தில்





No comments:

Post a Comment