FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Tuesday, March 16, 2010

3 ஆண்டுகளில் 10 கோடி இலக்கு

ரிலையன்ஸ் வரும் மூன்று ஆண்டுகளுக்குள் 10 கோடி புதிய வாடிக்கையாளர்களைப் பெறத் திட்டமிட்டுள்ளதாம். செய்தாலும் செய்வார்கள். ஆச்சரியமில்லை.


3 ஆண்டுகளில் 10 கோடி வாடிக்கையாளர்கள்: ரிலையன்ஸ் திட்டம்

சென்னை, மார்ச் 15: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மூன்று ஆண்டுகளில் மேலும் 10 கோடி வாடிக்கையாளர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்தகவலை, நிறுவனத்தின் தமிழ்நாடு பிராந்திய தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) அஜய் அவஸ்தி தெரிவித்தார்.
ரிலையன்ஸ் நிறுவனம் பான் இந்தியா செயல்பாட்டைத் தொடங்கி 7 ஆண்டுகளில் 10 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக திங்கள்கிழமை நடத்தப்பட்ட வீடியோ-கான்ஃபரன்ஸ் நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
சிடிஎம்ஏ மற்றும் ஜிஎஸ்எம் தொழில்நுட்பத்தில் இயங்கும் செல்போன் சேவையை அளிப்பதில் தற்போது இரண்டாவது பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் உயர்ந்துள்ளது. 2003-ம் ஆண்டில் பான் இந்தியா சேவையை தொடங்கிய இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை தற்போது 10 கோடியைத் தொட்டுள்ளது. உலகிலேயே 10 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கும் 4-வது நிறுவனமாக ரிலையன்ஸ் முன்னேறியுள்ளது.
அடுத்து மேலும் 10 கோடி வாடிக்கையாளர்களைப் பெற 3 ஆண்டுகள் அதாவது 1,000 நாள்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறு நகரங்களிலும் கம்பியில்லா இணையதள சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 4 முக்கிய அலுவலகங்களுடன் செயல்படும் ரிலையன்ஸ் இந்த மாத இறுதிக்குள் பல்லடம், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் 6 அலுவலகங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. தற்போது இந்தியா முழுவதும் 60 நகரங்களில் சிடிஎம்ஏ பிராட்பேண்ட் வசதி அளிக்கப்படுகிறது. அடுத்த மூன்று மாதங்களில் இது 125 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். 10 கோடி வாடிக்கையாளர் இலக்கை எட்டியதற்காக சிறப்பு இசை மற்றும் சிறப்பு லோகோவும் வெளியிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் இதற்கான பிரத்யேக இசையை தங்கள் செல்போனில் கேட்டு மகிழ முடியும் என்றார் அஜய் அவஸ்தி.

நன்றி: 'தினமணி'

No comments:

Post a Comment