கேபினெட் செயலாளர் திரு சந்திரசேகர் ஆலோசனைப்படி, நாட்டில் ப்ராட்பாண்ட் சேவைகளை அதிகரிப்பது குறித்து ஆராய ஒரு கமிட்டி அமைக்கப் பட்டது. அந்த கமிட்டி, 18000 கோடி ரூபாய் செலவில் 5 லட்சம் கி.மீ. தூரத்துக்கு 3 ஆண்டுகளில் OFC கேபிள்களைப் பதிக்கப் பரிந்துரைத்துள்ளது.
DOT இந்த யோசனை காரிய சாத்தியமில்லாதது என்று ஆட்சேபணை தெரிவித்துள்ளது. OFC பதிப்பது என்பது மிகுந்த கால தாமதம் ஆகக் கூடியது என்றும், குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்றும், மிகுந்த சிரமங்களைத் தரக்கூடிய ஒன்று என்றும் கருத்துத் தெரிவித்துள்ள DOT கமிட்டி மாற்று வழிகளை யோசிக்கவில்லை என்றும் கூறியுள்ளது. WI-MAX போன்ற முறைகளால் எளிதில் இலக்கை அடைய முடியும், செலவு குறைவு என்றும் விரைவாகவும் பணிகளை முடிக்க முடியும் என்றும் கருத்து தெரிவித்த DOT கிராமங்களை ப்ளாக் (வட்டாரங்கள்) உடன் இணைக்க OFC தான் வேண்டும் என்ற கமிட்டியின் நிலைப்பாடு தவறு எனவும் மைக்ரோவேவ் மூலம் எளிதில் அந்த இணைப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறும் DOT, இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்த டெலிகாம் கமிஷனிடம், தனது வாதங்களைத் தெரிவிக்கப் போவதாகச் சொல்லியுள்ளது.
முழுச் செய்தியையும் விரிவாகப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
No comments:
Post a Comment