FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Wednesday, February 17, 2010

3G ஏலம் எப்போது?

மத்திய அமைச்சரவைச் செயலாளரும், நிதித் துறைச் செயலரும் 3G ஏலம் விடுவது சம்பந்தமாக அனைத்து விவகாரங்களும் தீர்க்கப் பட்டு விட்டன எட்னும், இனி தொலைதொடர்பு அமைச்சரவை இது தொடர்பாக முறையான அறிவிப்பு வெளியிடும் என்று தெரிவித்துள்ளனர். தொலைதொடர்பு அமைச்சர் திரு ஆ.ராசா இது பற்றி சட்ட அமைச்சகம் முடிவு தெரிந்த பின்னரே முடிவு எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

       ஸ்பெக்ட்ரம் தொடர்பான ஏல நிபந்தனைகள் மிகக் கடுமையாக இருப்பதாகவும், அதில் உள்ள சில நிபந்தனைகள் ஒரு சில கம்பனிகளுக்கே ஆதரவாக இருப்பதாகவும் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் கம்பனிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் தொலைதொடர்பு அமைச்சகம் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதியுள்ளது.

No comments:

Post a Comment