FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Tuesday, February 23, 2010

செய்திகள் சில வரிகளில்

கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் எல்லா நவீன தொலைதொடர்பு வசதிகளும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 10000 தொலைதொடர்பு கோபுரங்களை நிறுவ அரசு தீர்மானித்திருப்பதாக நாடாளுமன்றக் கூட்ட துவக்க உரையில் குடியரசுத் தலைவர் திருமதி. ப்ரதீபா படில் தெரிவித்துள்ளார். 
__________________________________________________________________________________

 கிராமப்புறங்களில் ப்ராட் பாண்ட் சேவைகளை அதிகரிக்க இன்சென்டிவ் அளிப்பது பற்றி DOT பரிசீலித்து வருகிறது. இதுவரை கிராமங்களில் வயர் இணைப்புக் கொடுப்பதற்கு அளிக்கப் பட்டு வரும் லைசன்ஸ் கட்டண விலக்கை ரத்து செய்ய நிதி அமைச்சகம் முடிவு செய்திருப்பதால் அதை ஈடுகட்ட மாற்று வழிகளை DOT பரிசீலிக்கிறது. லைசன்ஸ் கட்டண விலக்கால் இது வரை பெரும் பயன் அடைந்து வந்த BSNL இதனால் பாதிக்கப் படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
_________________________________________________________________________________
நிதி மற்றும் சட்ட அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்து விட்ட படியால் இந்த வார இறுதியில் 3G ஏலத்துக்கான டெண்டர் விடும் நடவடிக்கைகள் துவங்கும் என நமது அமைச்சர் திரு ஆ. ராசா அறிவித்திருக்கிறார்.
__________________________________________________________________________________
BSNL Board memberகளில் ஒருவர் பதவி விலகியிருப்பதால் காலி இடம் நிரப்பப் படாமல் இருப்பதாகவும் எனவே, அந்த இடம் நிரப்பப் பட்ட பின்னரே போர்டு கூட்டம் நடைபெற முடியும் என்பதால், {23-2-2010ல் கூட்டம் கூடி நமது ஊதிய உயர்வு உடன்பாடுகள் ஏற்கப் படும் என்ற எதிர்பார்ப்பை ஏமாற்றமாக்கி, } கூட்டம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
_________________________________________________________________________________
இன்று பிஎஸ்என்எல் லில் ஊழியருக்கு எந்த கோரிக்கை வைக்கப் பட்டாலும் கடுமையான நிதிப் பற்றாக்குறை எனக் காரணங்கள் சொல்லி ஏற்கப் படுவதில்லை. ஆனால், இந்த நிதி நெருக்கடி என்பது அதிகாரிகளுக்கு அதிலும் உள்ளேயே வராத ITS அதிகாரிகளுக்கு இல்லை போலும். GM/PGM அந்தஸ்திலுள்ள அதிகாரிகளுக்கு இதுவரை வழங்கப் பட்டு வந்த ஹோட்டல் அலவன்ஸ் ரூ.3500 லிருந்து 6000 வரை உயர்த்தப் படுகிறதாம். குத்தைகைக்கு எடுக்கப் படும் கார்களுக்கு ட்ரைவிங் அலவன்ஸாக மாதம் 5000 ரூபாய் வரை அளிக்கப் படுமாம். அவர்கள் மாற்றலாகிச் செல்லும் ஊர்களுக்கெல்லாம் அந்தக் காரைக் கொண்டு செல்லலாமாம்.அவர்கள் ஓய்வு பெறும்போது ஒரு தொகையைக் கட்டிவிட்டு காரை அவர்களுக்கே சொந்தமாக்கிக் கொள்ளலாமாம்.  

No comments:

Post a Comment