FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Monday, February 8, 2010

BSNL நிர்வாகத்துக்கு வெளியாட்கள் தேவையா? பொதுச் செயலர் பதில்

 

BSNL நிர்வாகத்தில் திறமையான வெளியாட்களை நுழைக்க வேண்டும் என்ற சில அதிகாரிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனவே? அதே கோரிக்கையை வலியுறுத்தி ஹிந்து நாளிதழ் குழுமத்தைச் சேர்ந்த பிஸினஸ் லைன் தலையங்கம் எழுதியுள்ளதே?
நமது பொதுச் செயலர் பதில்
         கோரிக்கைகள் வைக்கும்போது பின்விளைவுகளையும் யோசிக்க வேண்டும். சில நேரங்களில் காலுக்குச் செருப்பு கேட்டால் குதிரை லாடத்தைக் காலில் ரிவிட் அடிக்கும் ஆபத்தும் நேரிடும். சமீபத்தில் BSNLன் நிதிநிலையையும், அதன் சந்தைப் பங்கையும் பிரதமர் ஆராய்ந்தபோது எல்லாரும் எதிர்பார்த்தது மானியங்களும், இன்சென்டிவ்களும் கிடைக்கும் என்று. ஆனால் அவர்கள் ஆலோசனையோ 10% பங்கு விற்பனை என்று. BSNLல் திறமையான நபர்கள் ஏராளம் உண்டு. வெளியாட்களை அழைக்க வேண்டியதில்லை.  நிர்வாகத்துக்கும் ஊழியருக்கும், தேவைப்படுவது அர்ப்பணிப்பு உணர்வும், மன உறுதியும் தான்.  வியாபாரத் தேர்ச்சி அடைந்தால் போதும்.

      From www.fnto.org

No comments:

Post a Comment