சேலத்தில் 24, 25 ஜனவரியில் நடைபெற்ற தமிழ்மாநிலச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
- அங்கீகரிக்கப்பட்ட CITU சார்ந்த தொழிற்சங்கத்தோடு 15-01-2010 அன்று போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் 12,500/- என நிர்ணயிக்கப்பட்டு ஊதியங்களை மாற்ற வேண்டும். 1-1-2007 முதல் பெறும் கிராக்கிப்படி 78.2% சம்பளத்தோடு இணைக்கப்பட்டு புதிய சம்பளம் நிர்ணயிக்க வேண்டும்.
- மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அனைத்து அலவன்ஸ்களும் BSNL ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அலவன்ஸ்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது போல் பாரபட்சமின்றி 27-2-2009 முதல் அமல்படுத்தப்பட வேண்டும்.
- ஏற்கனவே அமைச்சர் முன்னிலையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 5 கட்டப் பதவி உயர்வு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது போல எவ்வித பாரபட்சமுமின்றி ஊழியர்களுக்கும் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
- கடந்த பத்தாண்டுகளாக டெபுடேசனில் இருக்கும் ITS உள்ளிட்ட குரூப்-A அதிகாரிகளின் இரட்டை நிலை நீக்கப்பட்டு உடனடியாக BSNL கம்பெனியில் அவர்களது நிலை இறுதி செய்யப்பட வேண்டும். ஆறாவது சம்பளக்குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்பட வேண்டும்.
- 93 மில்லியன் GSM மொபைல் கருவிகள் வாங்குவதற்கான தடைகள் நீக்கப்பட்டு டெண்டர் இறுதி செய்யப்பட்டு உடனடியாக “பர்சேஸ் ஆர்டர்” வழங்கப்பட வேண்டும்.
- BSNL ஒரு சேவை நிறுவனம் என்பதாலும், கடுமையான போட்டிகளுக்கு இடையே செயல்பட வேண்டிய சூழ்நிலைகள் இருப்பதாலும், BSNL அரசுக்குச் செலுத்த வேண்டிய “லைசென்ஸ் கட்டணம்” ரத்து செய்யப்பட வேண்டும்.
- பங்கு விற்பனை விஷயத்தில் அரசு தன்னிச்சையாக முடிவுகள் மேற்கொள்வதைத் தவிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களையும் கலந்து ஆலோசித்து அதன்பிறகே இறுதி முடிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.
- “குறைந்தபட்ச தொழிற்சங்க உரிமைகள்” அனைத்து சங்கங்களுக்கும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment