ஜூன் 2008 முதல் ஜூன்2009 வரை நடந்த தொலைபேசி புதிய இணைப்புகள் சரண்டர் ஆகியவற்றை ஆய்வு செய்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. சிறு நகரங்களிலும், கிராமப் புறங்களிலும் பெருமளவில் L/L தொலைபேசிகள் சரண்டர் ஆனாலும் கூட சென்னை, டெல்லி, மும்பை, கல்கத்தா போன்ற பெரு நகரங்களில் லேண்ட் லைன் புதிய இணைப்பு பெறுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இது தவிர, பீஹார், மேற்கு உ.பி., ம.பி மாநிலங்களிலும் புதிய இணைப்புகள் அதிகரித்து வருவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
நமது மாநிலத்திலும்கூட இது சாத்தியமே. சரண்டர் செய்பவர்கள் வாடகை அதிகம் என்பதை ஒரு சாக்காகச் சொன்னாலும் சேவைக் குறைபாடுகள்தான் அவர்கள் நம்மை விட்டு விலகும் முக்கிய காரணம். அதிகாரிகள் செல்லுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தில், ஒரு சிறு பங்கையாவது லேண்ட் லைன் பராமரிப்பு, பழுது நீக்குவதற்கு அளித்து, தேவையான கேபிள் மற்றும் உபகரணங்களை அளித்து தக்க முனைப்பு காண்பித்தால், இங்கும் சரண்டர்களை முழுவதும் தடுக்க முடியாவிட்டாலும் குறைக்கவாவது செய்யலாம். நமக்குப் போட்டியேயில்லாத லேண்ட் லைன் பகுதியில் போதிய அக்கறையின்மை, கடும் போட்டிகள் நிறைந்த செல் சந்தையில் எந்தவிதமான சந்தை உத்திகளும் இல்லாமல் களத்தில் இருப்பது ஆகியவைகளே நமது பிரச்சினைகள்.
No comments:
Post a Comment