FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Wednesday, February 17, 2010

3 G சேவையை உடனே விலக்கிக் கொள்ள வேண்டுமாம்!

இப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும்  ஏற்படுத்தியுள்ள 3G சேவைகளை MTNL மற்றும் BSNL நிறுவனங்கள் அதை உடனடியாக நிறுத்திவிட வேண்டும் என இந்திய உளவுத் துறை “ரா” (RAW) சொல்லியுள்ளது. பாதுகாப்புக் காரணங்களாம்! இந்த வசதியின் மூலம் பரிமாறிக் கொள்ளப்படும் வீடியோக்களை அவை பரிமாறிக் கொள்ளப்படும் அந்த நேரத்திலேயே (Realtime) கண்காணிக்க முடியாது என்பது அவர்கள் வாதம். தேவைக்கேற்றபடி அவர்கள்தான் கருவிகளையும், உத்திகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஏற்கனவே மிக மிக காலம் தாழ்த்தி அறிமுகமாயிருக்கும் இந்த சேவையை நிறுத்த முடியாது என MTNL-BSNL நிர்வாகங்கள் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டன.

No comments:

Post a Comment