20 -20 கிரிக்கெட் போட்டி விளம்பரத்துக்கு 50 கோடியாம்
போனதுபோக இருக்கின்ற சந்தாதாரர்களைத் தக்க வைத்துக் கொள்ள மிக அவசியமான கேபிள் பராமரிப்புப் பணிகளுக்கு, பழுது நீக்கும் பணிகளுக்கு செலவழிப்பதா ! கூடாது கூடாது! அலுவலகங்களில் உள்ள சாதனங்களில் பழுது நீக்க செலவா ? வேண்டாம் வேண்டாம்! என்று குண்டூசி முதல் எல்லாவற்றிற்கும் ஆயிரம் கேள்விகள் கேட்டு வருமானம் குறைந்தாலும் பரவாயில்லை, அதிருப்தியால் இன்னும் இருப்பவர்களும் வெளியேறி தனியார் பக்கம் சென்றாலும் கவலையில்லை செலவைக் குறைப்பது ஒன்றே எங்கள் நோக்கம் என்று மாவட்ட அளவிலே செயல்பாடு.
ஆனால் கார்ப்பரேட் நிர்வாகமோ 20 -20 கிரிக்கெட் போட்டியில் விளம்பரத்துக்காக 50 கோடி செலவழிக்க யோசனை செய்கிறதாம். ப்ராட் பாண்ட் மோடம், தொலைபேசி கருவிகள், அத்தியாவசியப் பணிகளுக்குத் தேவையான வையரிலிருந்து எல்லாமே எப்போதும் ஸ்டாக் இல்லை என்ற நிலையில், அறிவிக்கின்ற திட்டங்கள் எப்போது நடைமுறைக்கு வரும் என்று (வாடிக்கையாளர் தேடி வந்து விசாரிக்கின்ற வாடிக்கையாளர் சேவை மையத்திலுள்ள ஊழியருக்குக் கூடத்) தெரியாத அளவு நிர்வாகங்கள் இருக்கின்ற நிலையில், விளம்பரத்தால் பெறப் போகும் பலன்கள் வழக்கம்போல் பூஜ்யம் என்றதான் ஆகப் போகிறது. தனியார்கள் அடிமட்டம் வரை பொருட்களையும், திட்டங்களையும் கொண்டு சேர்த்த பின் விளம்பரங்களை ஆரம்பித்து பெரும் வெற்றி பெறுகின்றனர். ஆனால் நாமோ, விளம்பரம் வரும் முன்னே, பொருட்கள் (வந்தாலும் வரும்) பின்னே என்று செயல்படுகிறோம்.
இந்த 50 கோடி செலவு இப்போது தேவைதானா?
No comments:
Post a Comment