இன்று தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. விக்ருதி என்றால் விரோதிகளை அழிப்பது என்று படித்த ஞாபகம். ஊழியர் விரோத சக்திகள் தலைதூக்கி நம்மை அச்சுறுத்தும் இந்த நேரத்தில் அவர்களை அழித்து நம் வாழ்வில் ஒளி வீசச் செய்யும் நல்ல ஆண்டாக இந்த தமிழ்ப் புத்தாண்டு மலர இறைவனைப் பிரார்த்திப்போம்.
இன்று ஒரு நாளாவது சங்கப் பிரச்சினைகள், அலுவலகத் தலைவலிகள், எதிர்கால அச்சங்கள் எல்லாவற்றையும் மறந்து குடும்பத்தாருடன் மகிழ்ந்து இருப்போம் என்று எண்ணி இந்த வலைக்குள் வராத நண்பர்களுக்கும்,
அட! இன்று ஒரு நாளாவது ஏதாவது நல்ல செய்தி போட்டு சந்தோஷப்படச் செய்வார்களா என்று ஆவலுடன் வலைக்குள் எட்டிப் பார்க்கும் தோழர்களுக்கும்,
உண்மைகள் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக அவ்வப்போது வருகின்ற அதிகாரிகளுக்கும் எல்லா நலன்களையும் வளங்களையும் அருளும் ஆண்டாக, முக்கியமாக பிடித்திருக்கின்ற பீடைகள் எல்லாம் அகன்று முழு வலிவுடன் நமது BSNL மாறுகின்ற ஆண்டாக விளங்க நமது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.
கேரள வழக்கப்படி இன்று மங்கலமான பொருட்களின் மீது கண் விழிக்க வேண்டுமாம். ஒரு இனிய பாடலைக் கேட்போமே!
No comments:
Post a Comment