FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Saturday, April 10, 2010

3-ஜி ஏல விற்பனை தொடங்கியது

3-ஜி ஏல விற்பனை தொடங்கியது | India | Dinamani
3-ஜி ஏல விற்பனை தொடங்கியது



புது தில்லி,​​ ஏப்.9: மூன்​றாம் தலைமுறை அலைக்கற்றை ​(3-ஜி ஸ்பெக்ட்ரம்)​ ஏலம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.​ அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களான பார்தி ஏர்டெல்,​​ வோடபோன்,​​ ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,​​ டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

நாட்டில் மொத்தம் உள்ள 22 தொலைத் தொடர்பு வட்டாரங்களில் ஏல விற்பனை சுமுகமாக தொடங்கியதாக தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

3-ஜி ஏல விற்பனை மூலம் அரசு ரூ.​ 35 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.​ இத்தொகையை திரட்ட முடியுமா?​ என்று அதிகாரிகளிடம் கேட்கப்பட்டதற்கு,​​ இப்போதே அதுகுறித்து முடிவு செய்வது மிகவும் சிரமம் என்று தெரிவித்தனர்.​ எந்தெந்த தொலைத் தொடர்பு வட்டாரங்களில் நிறுவனங்கள் எந்த அளவுக்கு கூடுதல் தொகைக்கு ஏலம் கேட்கின்றன என்பதைப் பொறுத்தே இலக்கை எட்ட முடியுமா?​ என்று தீர்மானிக்க இயலும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தொலைத் தொடர்பு சேவை அளிப்பதில் மொத்தம் 9 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.​ இதில் 6 நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாகும்.​ இவை 3 முதல் 4 ஸ்லாட்கள் வரை விண்ணப்பித்துள்ளன.

பான் இந்தியா எனப்படும் இந்தியா முழுவதும் வெளிநாடுகளுக்கும் சேவை அளிப்பதற்கு பான்-இந்தியா லைசென்ஸ் ​ கோரிய ​ நிறுவனங்களில் பார்தி ஏர்டெல்,​​ ரிலையன்ஸ் டெலிகாம்,​​ ​ ஐடியா செல்லுலர்,​​ வோடபோன் எஸ்ஸôர்,​​ டாடா டெலி சர்வீசஸ்,​​ ஏர்செல் ஆகிய நிறுவனங்களின் விண்ணப்பங்கள் இறுதி கட்ட பரிசீலனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.​ ​

ஏல விற்பனை நடைமுறை வெள்ளிக்கிழமை தொடங்கி 3 வாரங்களுக்கு நடைபெறும் என்று தெரிகிறது.​ மின்னணு முறையிலான ஏலம் காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 7.30 வரை நடைபெறும்.​ ​

3-ஜி அலைக்கற்றைக்கானகுறைந்தபட்ச தொகை ரூ.3,500 கோடியாக அரசு நிர்ணயித்துள்ளது.​ கம்பியில்லா இணைப்புகளுக்கு குறைந்தபட்ச தொகை ரூ.1,750 கோடியாகும்.

3-ஜி இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் செல்போன் மூலம் அதிவிரைவாக இணையதள தகவல்களைப் பெறுவதோடு பதிவிறக்கமும் செய்யலாம்.​ மேலும் பேசுபவரின் முகத்தை பரஸ்பரம் பார்க்கும் வசதியையும் பெறமுடியும்.​ ​ ஒவ்வொரு சுற்றுக்கான ஏலத் தொகையை விண்ணப்பித்தவர்கள் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்லலாம்.