19-12-2010 அன்று கடலூரில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய FNTO பொதுச்செயலர் தோழர் வள்ளிநாயகம், கடந்த காலத்தில் BSNLEU மற்றும் NFTE –யுடன் கூட்டணியில் FNTO –வுக்கு அகில இந்திய அளவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பற்றியும், எந்தச் சூழ்நிலையில் BSNLEU –வுக்கோ அல்லது NFTE –க்கோ ஆதரவளிக்காமல் FNTO தனித்துப் போட்டியிடுவது என்று கொல்கத்தாவில் நடந்த மத்தியச் சங்கச் செயற்குழுவில் முடிவெடுக்கப் பட்டது என்பது பற்றியும் விளக்கினார். அந்த மத்தியச் செயற்குழுவில் தோழர்கள் P.ஆண்டியப்பனும் R.V.ஜெயராமனும் கூட்டணி பற்றிய தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். ஆனாலும், ஜனநாயக அமைப்பில் பெரும்பான்மைக் கருத்துக்கே முதலிடம் என்ற அடிப்படையில், வேறெந்தக் கூட்டணியிலும் இடம்பெறாமல் FNTO தனித்துப் போட்டியிடுவது என்ற மத்தியச் செயற்குழுவின் முடிவைச் செயலாக்குவது நம் ஒவ்வொருவரது கடமை என்றும் எடுத்துரைத்தார். பொதுச்செயலரின் கருத்தை அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் ஏற்றுக்கொண்ட வேளையில், தோழர்கள் P.ஆண்டியப்பனும், R.V.ஜெயராமனும், G.K.செளந்தர்ராஜனும் ஜெயிக்கும் சங்கத்துடன் கூட்டணி வைக்கவேண்டுமென்று வலியுறுத்தினர்.
தற்போது, பெட்டியைவிட்டு பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அம்மூவரும் சேர்ந்து கடலூரில் அரங்கேற்றிய நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது. அவர்கள் FNTO-வை விட்டு விலகி, புதுச் சங்கம் அமைத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் யாரும் எப்படியும் புதுக்கடை போடலாம், தப்பில்லை. ஆனால் என்ன நடந்திருக்கிறதென்றால், எதிர்வரும் தேர்தலில் BSNLEU-வுக்கு முட்டுக்கொடுப்பதற்காக தனிச்சங்கம் ஆரம்பித்தவர்கள், நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி FNTO என்னும் பெயரிலேயே ஒட்டிக் கொண்டுள்ளார்கள். இது, தேர்தலில் FNTO உறுப்பினர்களை முடிந்தவரை குழப்ப வேண்டுமென்ற அவர்களது கீழ்த்தரமான குறுகிய புத்தியையே காட்டுகிறதன்றி வேறில்லை. ஆனாலும், தலைமையின் மீது நம்பிக்கையும் சங்கத்தின்பால் விசுவாசமும் கொண்ட FNTO தோழர்களை, BSNLEU-வின் கைக்கூலிகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் துரோகிகளின் மாய்மால பொய்பிரச்சாரங்கள் ஒன்றும் செய்துவிட முடியாது. FNTO-வைச் சீரழிக்க நினைக்கும் சிறுமைப் புத்தி கொண்ட இந்த ஆண்டிக்கூட்டத்தின் எண்ணம் ஈடேறாது.
தார்மீக அடிப்படை என்னவென்றால், ஒரு சாதாரண உறுப்பினர்கூட வேறு சங்கத்துக்குத் தாவும்முன்போ அல்லது தனிச்சங்கம் காணும்முன்போ ராஜினாமா செய்துவிட்டுப் போவதுதான் மரியாதை. ஆனால் இவர்கள் மத்திய/மாநில/மாவட்டச் சங்கப் பதவிகளை ராஜினாமா செய்யவுமில்லை, பொறுப்புக்களையும் கணக்குகளையும் முறையாக ஒப்படைக்கவுமில்லை. தோழர் P.ஆண்டியப்பன் 15 நாட்களுக்கு முன்பே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக ஒரு இணையதளம் புணைந்திருந்தது. ஆனால் இன்றுவரை, அவரது ராஜினாமா கடிதம் மாநிலத் தலைவருக்கோ, மாநிலச் செயலருக்கோ அல்லது மத்தியச் சங்கத்துக்கோ கிடைக்கப் பெறவில்லை. ஆக, அது வடிகட்டிய பொய் என்பது தெரிந்துவிட்டது. ஊழியர்கள் நலன் காக்க என்ற போர்வையில் ஏதோ சிலபல சலுகைகளுக்காகவும் தத்தமது சுயநலன்களைக் காக்கவும் தனிச்சங்கம் கண்டவர்கள், அச்சங்கம் காணுமுன்பே எந்தெந்த நிர்வாகிகள் ராஜினாமா செய்தார்கள் என்பதையும் அந்த இணையதளத்தில் ஏனோ வெளியிட இயலவில்லை போலும்; வெட்கங்கெட்ட துரோகிகள்.
வாக்களிப்பீர் FNTO-வுக்கே, வரிசை எண் 14-ல், தீபம் சின்னத்தில் !
No comments:
Post a Comment