FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Monday, December 20, 2010

Our Natarajan is no more with us

             Our Natarajan, who was one of the founder members of FNPTO in Karaikudi Sub Division under Virudhunagar Telecom Division passed away on 19-12-2010. He was our Divisional Secretary for two consecutive terms. And those periods were very turbulent one when each and every member of FNTO was taken to task just because he/she was a member of FNTO. Sri Natarajan effectively served and protected the members. After retirement, he remained as a silent spectator and could not take active part in trade union activities because of his illness.
            We regret his demise and convey our heartfelt condolences to the bereaved family.


காரைக்குடி FNTO E-3 சங்கத்தின் மாவட்டச் செயலராகத் திறம்படப் பணியாற்றி ஓய்வு பெற்ற தோழர் V.நடராஜன் அவர்கள் நேற்று           (19-12-10) காலமானார். அன்னாரது பூதவுடல் காரைக்குடி, தந்தை பெரியார் நகரிலுள்ள அவரது இல்லத்திலிருந்து இன்று (20-12-2010) காலை 10 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.
எல்லோராலும் ”பெரிய அண்ணன்” என அன்பாக அழைக்கப் பட்ட அவருக்கு வயது 73. அவருக்கு ஒரு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகனுக்கும் மகளுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது.

தோழர் V.நடராஜன் FNTO சங்கத்தின் மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் தான் காரைக்குடி மாவட்டம் அனல் பறக்கும் அளவுக்கு பிரச்சினைகளைச் சந்தித்தது.

FNTO உறுப்பினரான கேசுவல் மஸ்தூர் தோழர் மாதவன் இராமநாதபுரத்திலிருந்து பரமக்குடிக்கு  ஒருதலைப்பட்சமாக மாற்றப்பட்டது, பரமக்குடி கிளைச் செயலர் தோழர் பொருள் பொன்னையாவை அன்றைய SDOT அடியாட்களை வைத்து மிரட்டியது போன்ற பிரச்சினைகளால் காரைக்குடி மாவட்டமும், GM(South) அலுவலகமும் அல்லோலகல்லோலப் பட்டது. அவரது தலைமையில் நடந்த வீரஞ்செறிந்த போராட்டங்கள் மறக்கவோ, மறுக்கவோ முடியாதவை.


        தலைவனை இழந்து தவிக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


No comments:

Post a Comment