டிசம்பர் 1 முதல் 3 வரை - மூன்று நாட்கள் நடைபெறுவதாக இருந்த அகில இந்திய வேலைநிறுத்தம், 2-12-2010 அன்று இரவு 9 மணியளவில் நிர்வாகத்திற்கும் கூட்டு நடவடிக்கைக் குழுவுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், இரண்டு நாட்கள் போராட்டத்தோடு ஒத்திவைக்கப் பட்டது.
போராட்டத்திற்கான முக்கியமான கோரிக்கைகளில் ஒன்றாக, தொழிலாளர்களுக்கு நேரடியான பணப்பயன் தரக்கூடியதான 78.2% IDA merger என்ற கோரிக்கை இருந்தபோதும், தொடர்ந்த சம்பள வெட்டுகளின் காரணமாக தொழிலாளர்களிடையே போராட்ட உணர்வு மங்கிவிட்டதாலே, எப்போதும் போராட்டக்களத்தில் முன்னணியில் இருக்கும் காரைக்குடி மாவட்டம் - இந்த முறை ”போராட்ட வீச்சு போதவில்லை” என்று மற்றவர்கள் குறைசொல்லும் அளவிற்கு – மோசமான பெயர் வாங்கிவிட்டது. இதற்கு, தொழிலாளர்களை மட்டும் குறைசொல்லிப் பயனில்லை. காரைக்குடியில் இல்லாத JAC –யும், போராடத் தயார்படுத்த சுற்றுப்பயணம் செல்லாத தலைவர்களும், வரப்போகும் பொல்லாத தேர்தலுமே காரணமாகும். எப்படியோ, உணர்வோடு போராடிய தோழர்களுக்கு வீர வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment