அகில இந்திய அளவில் (Pan India) 3G சர்வீசஸ் வழங்கிவரும் ஒரே நிறுவனமான BSNL 20 லட்சம் 3G Mobile/Data இணைப்புகளைத் தாண்டி சாதனை புரிந்துள்ளது. ”என் நண்பன் சூப்பர்” இலவச சிம் வழங்கும் திட்டமும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று சாதனை புரியவுள்ளது.
அதே நேரத்தில், இராமநாதபுரம் தொலைபேசி நிலையம் அடுத்தடுத்து இரண்டு தடவை பழுதுபட்டு பலநாட்களாக சுத்தமாக படுத்துவிட்டது என்பதும் அதற்கு காரணம் எஞ்சின் ஆல்டர்னேட்டர் பழுதாகிவிட்டது என்பதும் வேதனையான செய்தி. இரண்டு எஞ்சின்கள் இருந்தும் ஏற்கனவே பழுதான ஒன்றை உடனடியாகப் பழுதுநீக்கவோ அல்லது ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த இன்னொன்றையாவது முறையாகப் பராமரிக்கவோ GM அலுவலத்திலுள்ள அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை என்பது இராமநாதபுரத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களின் குற்றச்சாட்டு. இது வெட்கக் கேடான விசயம். BSNL -ஐக் காப்போம் என்ற கோஷம் சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது.
அதேபோல, காரைக்குடி - சிவகங்கை ரயில்வே ரூட்டில் 50 நிமிட ரயில் பயணத்தில் 5 நிமிடம்கூட BSNL சிக்னல் கிடைப்பதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும்கூட பலனில்லை. ரயில் பயணிகளிடம் ”என் நண்பன் சூப்பர்” இலவச சிம் ஸ்கீம் குறித்துப் பேசினால், சிம் நீங்கள் தருவீர்கள், சிக்னல் யார் தருவது என்று சிரிக்கிறார்கள். நமக்கு வெட்கமாக இருக்கிறது. BSNL -ஐ சரிவிலிருந்து காப்பது எப்படி ?
சரியான “தலை”யில்லாத காரைக்குடி மாவட்ட நிர்வாகம். யாருக்கோ வந்த விருந்து என்பதைப் போல, காரைக்குடியைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறையில்லாத – இரவில் ”வந்து போகின்ற” பொது மேலாளர்.
உருப்படுமா இந்தக் காரைக்குடி மாவட்டம் ?
No comments:
Post a Comment