FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Monday, February 14, 2011

எது வெற்றி?

தஞ்சாவூர் என்எப்டிஇ வலைத் தளத்திலிருந்து (இது திரு குப்தா கும்பகோணத்தில் பேசியதன் செய்திச் சுருக்கம்)

வம்பன்:   நாம நடத்தப்போற போராட்டத்துக்கு கோரிக்கையை தெளிவா தேர்ந்தெடுத்து, விவாதத்துக்கு தேவையான பாய்ண்ட்டுகளை தயார் பண்ணி வச்சிக்கிட்டு, போராட்டத்தை அறிவிச்சு,  அதுல தொழிலாளிக்கு சேதாரம் ஏதுமில்லாம ஜெயிக்குரோம்ல அதுதான் வெற்றி அப்புடீன்னார் நம்ம குப்தா!  

நண்பன்: 
  வெரிகுட்!வெரிகுட்!!   நீ  கவனமாத்தான்        கேட்டிருக்கறே! வேற என்னா பேசினார்!


வம்பன்:
   நெறைய பேசினார். முக்கியமான ஒரு சில செய்திகளை மட்டும் சொல்றேன்.  அதாவது, போராட்டமும் நடத்தாம, அப்புடியே நடத்துனாலும் எந்த உடன்பாடும் ஏற்படாம அங்கீகாரப் போட்டியிலே மட்டும் வெற்றி பெற்றால் அது வெற்றி கிடையாது.  காலத்தே, போராடுவதும், கோரிக்கையை வென்றேடுப்பதும்தான் வெற்றி அப்படீன்னார். 


    அது மட்டும் இல்ல.   என் காலத்துல பெற்ற OTBP, BCR, 10 % அதெல்லாம் அப்போ இருந்த நிலைமைக்குத்தான் பொருத்தம்.   இன்னைக்கி இன்னும் மாற்றம் கொண்டு வரணும்.    பென்சன்ல இப்ப ஒரு நெருக்கடிய கொண்டு வந்திருக்காங்க.  அன்னைக்கி நாம 2000 செப்டம்பர் 6, 7, 8 தேதிகள்ல FNTO, BTEF சங்கத்தோட சேர்ந்து நடத்துன போராட்டம் இன்னைக்கி வரைக்கும் பென்சனை பிரச்சினையில்லாமல் கொடுத்துக்கிட்டிருக்கு.   அன்னைக்கி அதுலயும் சேராம நின்னது நம்பூதிரி அணிதான்.   சேராதது மட்டுமல்ல, EL,  GPF,  HBA  எல்லாம் போய்விடும்,  பொதுத் துறையானா எல்லாமே போய்விடும்.  இன்றைக்கு பொதுத் துறையாகி, அதில பெற்று வந்த எல்லாமே இன்னைக்கும் வாங்கிக்கிட்டிருக்கோம்.   இதுதான் வெற்றி.  BSNLEU இதுல தோல்வி அடஞ்சிருச்சி.


No comments:

Post a Comment