FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Saturday, February 5, 2011

தொடரும் தொழிற்சங்கப் பயணம்! தேர்தலோடு பயணங்கள் முடிவதில்லை!


துணிந்து நில், தொடர்ந்து செல், தோல்வி கிடையாது தோழா !
அகில இந்திய அளவில் 1,06,971 வாக்குகளைப் பெற்று BSNLEU முதலிடத்தையும் 80,300 வாக்குகளைப் பெற்று NFTE இரண்டாமிடத்தையும் 16,951 வாக்குகளைப் பெற்று FNTO மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது. தமிழகத்தில் 8,237 வாக்குகளைப் பெற்று NFTE முதலிடத்தையும் 7,240 வாக்குகளைப் பெற்று BSNLEU இரண்டாமிடத்தையும், 1,330 வாக்குகளைப் பெற்று FNTO மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது. நான்கு மாநிலங்களில் FNTO இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
BSNLEU –வும் NFTE –யும் மெகா கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலைச் சந்தித்த போது, எந்தக் கூட்டணியும் இல்லாமல் FNTO தனித்தே தேர்தலை எதிர்கொண்டது. ஒருபுறம், FNTO தனித்து நிற்பதைப் பலவீனமாகப் பிரச்சாரம் செய்த இரண்டு கூட்டணியினரும், FNTO உறுப்பினர்களைத் தங்களது இலக்காக்கிக் கொண்டு இல்லந்தோறும் சென்று பல்முனைத் தாக்குதல்களில் ஈடுபட்டு அவர்களது வாக்குகளைக் கவரக் கடும் பிரயத்தனம் செய்தனர். மறுபுறம், FNTO இரண்டாக உடைந்தது என செய்தித்தாள்களுக்குப் பேட்டி கொடுத்து, ஜெயிக்கும் சங்கத்துடன் கூட்டணி என்று FNTO –வின் பெயரைப் பயன்படுத்திக் குறுக்குச்சால் ஓட்டிய ஆண்டிக் கூட்டமும், தன்பங்குக்கு FNTO தலைமையைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பதன் மூலமாக கூட்டணி விசுவாசத்தை வெளிப்படுத்தி, FNTO உறுப்பினர்களது வாக்குகளை BSNLEU கூட்டணிக்கு வாங்கித் தருவதாகக் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
இவற்றையெல்லாம் புறந்தள்ளி, இந்தத் தேர்தலில் FNTO காணாமல் போய்விடும் என்ற பலரது கனவுகளையும்/ஆரூடங்களையும் பொய்யாக்கி, 16,951 வாக்குகளைப் பெற்று FNTO மூன்றாமிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதானது - தலைமை மீது நம் தோழர்களுக்கு இருக்கும் உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடேயன்றி வேறில்லை. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும், போகும். ஆனால், நாற்பதாண்டு காலப் பாரம்பரியம் கொண்ட, ஊழியர்களின் முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பாடுபட்டு வரும் தேசியச் சங்கம் - தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல், தொழிலாளர்களின் உரிமைகளுக்காக் குரல் கொடுப்பதில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் என்ற தோழர்களின் நம்பிக்கை வீண்போகாது. துரோகங்களைப் புறந்தள்ளி, தேசியச் சங்கத்தின் பிதாமகர் K.R. காட்டிய வழியில் தொழிற்சங்கப் பயணம் தொடரும். வீறு நடை போடுவோம் ! அனைவருக்கும் வீர வாழ்த்துக்கள் !

No comments:

Post a Comment