FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Monday, October 3, 2011

விருப்ப(மற்ற) ஓய்வு (VRS) – FNTO-வின் நிலை


நிர்வாகம் தொழிலாளர்கள் மீது விருப்ப ஓய்வுத் திட்டத்தை திணிக்க முற்படாத போதும், விருப்ப ஓய்வில் செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கு பரஸ்பரம் பயன்தரக்கூடிய நல்லதொரு திட்டத்தை வழங்க நிர்வாகம் முன்வரும்  போதும் நாம் அதை தேவையின்றி எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என்பது FNTO-வின் நிலை.

மாறாக, தொழிலாளர்கள் மீது விருப்ப(மற்ற) ஓய்வுத் திட்டத்தை நிர்வாகம் திணிக்க முற்பட்டாலோ அல்லது  அத்திட்டமானது தொழிலாளர்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் இல்லையென்றாலோ  FNTO அதைக் கடுமையாக எதிர்க்கும்.

      நிர்வாகம் ஏற்கனவே இது சம்பந்தமாக தொழிற் சங்கங்களை கலந்தாலோசிக்க ஆரம்பித்துள்ள நிலையில், தற்போதைக்கு எந்தப் போராட்டத்தையும் FNTO அறிவிக்கவோ, கலந்துகொள்ளவோ இல்லை.

1 comment:

  1. சுருக்கமாக ஆனால் விளக்கமாக நமது நிலைப்பாட்டினைச் சொல்லி விட்டீர்கள்! நன்றி! அடிக்கடி எழுதுங்கள்!

    ReplyDelete