BSNL இன்னும் இரண்டு வருடங்களில் நல்ல நிலைக்குத் திரும்பும்
என்று BSNL-ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு ராகேஷ் குமார் உபாத்யாய் நம்பிக்கை
தெரிவித்திருக்கிறார். பிசினஸ் லைன் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது அவர்
இவ்வாறு கூறியிருக்கிறார். தொலைத்தொடர்பு தொழிலில் கட்டண யுத்தம் (price war) காரணமாக,
குறைவான எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்டுள்ள தனியார் நிறுவனங்கள் கூட வருவாய்
இழப்பைச் சந்திக்கின்ற இன்றைய சூழலில், BSNL நிறுவனத்தில் தொழிலாளர் – தொலைபேசி எண்ணிக்கை
விகிதாச்சாரம் மிக அதிகமாக உள்ளதால் உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதே நட்டத்திற்கான
காரணம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். தொழிலாளர் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கத்தில், தகுந்த விருப்ப
ஓய்வுத் திட்டத்தை அமல்படுத்த உத்தேசித்துள்ளதாகவும், அது நல்லபடியாக நிறைவேறும் பட்சத்தில்
BSNL இன்னும் இரண்டு வருடங்களில் நல்ல நிலைக்குத் திரும்பும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக
அவர் கூறியிருக்கிறார்.
No comments:
Post a Comment