தமிழ் மாநில அளவில், தொழிலாளர் மற்றும் அதிகாரிகள் 17 பேர் விருதுக்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டத்தில் பணிபுரிபவரும், தேசியச் சங்கத்தின் நெடுநாளைய உறுப்பினருமான தோழர் S.யோகேஸ்வரன், SR.TOA(G) அவர்களுக்கு 2011-ம் ஆண்டுக்கான விஷிஸ்ட் சன்ச்சார் சேவா பதக் அவார்டு வழங்கப் பட்டுள்ளது.
முன்னாள் இராணுவ வீரரும், இந்நாள் கடமை வீரருமான தோழர் S.யோகேஸ்வரன், தேசியச் சங்கத்தின் பால் பற்றும் கொள்கைப் பிடிப்பும் கொண்ட, துடிப்பு மிக்க தோழர்.
அதே நேரத்தில், சங்க வேறுபாடின்றி அனைவருக்கும் உதவிடும் மனப்பாங்கு கொண்டவர். அதிகாரிகளை அனுசரித்துப் பணியாற்றிடும் வேளையில், தவறென மனதில் பட்டதைச் சுட்டிக்காட்டவும் தயங்காதவர். அதிகாரிகளுக்கு அலுவல் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்குபவர், ஆனால் ஜால்ரா போடத் தெரியாதவர்.
This is not the first of your posts I've read, and you never cease to amaze me. Thank you, and I look forward to reading more.
ReplyDeletesecurity equipment