தொலைதொடர்புத் துறையில் புதிய வரவான யுனிநார் கம்பெனி தனது சந்தாதாரர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக புதிய யுக்திகளைக் கையாள்கிறது. இதனால் வினாடிக்கு ஒரு பைசா என்று கட்டண குறைப்புப் போட்டிகள் நிகழ்ந்ததுபோல் மறுபடியும் எல்லா நிறுவனங்களும் கட்டண குறைப்பு செய்யப் படும் நிலை உருவாகலாம். யுனிநார் என்ன செய்தது? நேரடியாக எந்த வித கட்டண குறைப்பு அறிவிப்பையும் செய்யவில்லை. ஆனால், மொபைல் டவர்களில் நடக்கும் ட்ராபிக்கைப் பொறுத்து டிஸ்கவுண்ட் தருவதாக அறிவித்துள்ளது. இதன்படி ட்ராபிக் அதிகமாக உள்ள டவர்கள் உள்ள இடங்களிலிருந்து செய்யப்படும் அழைப்புகளுக்கு 5% என ஆரம்பித்து குறைவான ட்ராபிக் உள்ள இடங்களிலிருந்து செய்யும் அழைப்புகளுக்கு 60% வரை டிஸ்கவுண்ட் அளிக்கப் படும் என அறிவித்துள்ளது. எவ்வளவு தள்ளுபடி என்பது கைப்பேசியிலேயே காட்டப் படும் எனவும் கூறியுள்ளது. விரிவான செய்திகள் ஆங்கிலத்தில் இங்கே காணலாம்.
No comments:
Post a Comment