Monday, December 25, 2017
Saturday, December 16, 2017
West Bengal Circle Conference - 25/11/2017 & 26/11/2017
4th
Circle conference of NUBSNLW(FNTO), West Bengal Circle was held on 25/11/2017
& 26/11/2017 at Islampur, Uttar Dinajpur-733202. On behalf of CHQ, Sri
D.Chandrasekaran, Jt.General Secretary and Sri Alok Nandi, Dy.General Secretary
attended the Circle Conference and addressed the delegates. Prior to that, they
also attended the function organized by local Congress leaders in memory of
recently deceased leader Sri Priya Ranjan Dasmunshi, Ex.Central Minister at
Islampur Bus Terminus. Sri G.Muthukumaran, District Secretary and Sri
A.Sivakumar, Branch Secretary of Karaikudi SSA also accompanied the Jt.GS and attended the conference as
visitors.
Tuesday, October 17, 2017
Wednesday, September 20, 2017
கண்ணீர் அஞ்சலி - தோழர் நீதிநாதன் மறைந்தார்
FNTO தமிழ்
மாநிலச் சங்கத்தின் துடிப்பான மாநிலப் பொருளாளர் அருமைத் தோழர் நீதிநாதன் (Civil
Wing/சென்னை) உடல்நலக் குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் 20/09/2017 புதனன்று
காலமானார்.
அன்னாரது நல்லடக்கம் 21/09/2017 வியாழனன்று சென்னை கொளத்தூரில் மதியம் 2.00 மணியளவில் நடைபெற உள்ளது.
அன்னாரின் மறைவுக்கு நமது கொடி தாழ்த்திய அஞ்சலியைக் காணிக்கையாக்குகின்றோம்.
தலைவனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது நல்லடக்கம் 21/09/2017 வியாழனன்று சென்னை கொளத்தூரில் மதியம் 2.00 மணியளவில் நடைபெற உள்ளது.
அன்னாரின் மறைவுக்கு நமது கொடி தாழ்த்திய அஞ்சலியைக் காணிக்கையாக்குகின்றோம்.
தலைவனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Tuesday, August 8, 2017
BSNL அதிகாரிகளுக்கு 1-1-2017 முதல் ஊதிய உயர்வு
BSNL உள்ளிட்ட மத்திய
அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு 1-1-2017 முதல் மூன்றாவது
ஊதிய உயர்வு (3rd Pay Revision) வழங்குவதற்கான உத்தரவு DPE-யால் வெளியிடப்
பட்டுள்ளது.
DPE உத்தரவின் இணைப்பு-II
(பாரா-5) பிரிவு-( c ) படி, கூடுதல் செலவினம் வரிக்கு முந்தைய லாபத்தில் 20%-க்கு அதிகமாக
இருக்கக் கூடாது என்ற நிபந்தனை (Affordability clause) BSNL-க்கு பொருந்தாது. எனவே, BSNL அதிகாரிகளும்
தொழிலாளர்களும் 15% Fitment உடன் ஊதிய மாற்றம் பெறுவதில் இனி தடையேதும் இல்லை.
Saturday, August 5, 2017
Pay Revision of Executives in BSNL w.e.f. 01/01/2017 - DPE orders
Orders have
been issued by DPE for Pay Revision of Executives of Central Public Sector
Enterprises including BSNL w.e.f. 01/01/2017.
For orders, click here.
There is a relaxation in the Affordability clause under section (c) of Annexure-II (Para 5) of the DPE orders.
As per the above DPE guidelines, Affordability condition is NOT applicable to BSNL and BSNL employees are entitled for implementing the 3rd Pay Revision with 15% Fitment Benefit.
Saturday, July 22, 2017
அகில இந்தியச் செயற்குழு - 2017 ஜூலை 7 & 8 - பாட்னா
FNTO சங்கத்தின்
அகில இந்தியச் செயற்குழு 2017 ஜூலை 7 மற்றும் 8-ம் தேதிகளில் பீஹார் தலைநகர் பாட்னாவில்
சிறப்பாக நடைபெற்றது. அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் K. ஜான் தலைமை வகிக்க, மத்திய
சங்கப் புரவலர் தோழர் M.R. வஷிஸ்ட் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் தோழர் K. ஜெயப்பிரகாஷ்
இடைக்கால செயல்பாட்டு அறிக்கையை வாசிக்க, நிதிச் செயலாளர் தோழர் P.C.பாதக் நிதிநிலை
அறிக்கையை வாசித்தார்.
தமிழ் மாநிலத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் தோழர் D.சந்திரசேகரன்,
காரைக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் G.முத்துக்குமரன், காரைக்குடி கிளைச் செயலாளர்
தோழர் A.சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்
வந்து பங்கேற்ற மாநிலச் செயலாளர்களும், மத்தியச் செயற்குழு உறுப்பினர்களும் விவாதங்களில்
கலந்துகொண்டு தமது செழுமையான கருத்துக்களை முன்வைத்தனர்.
தமிழ் மாநிலச்
செயலாளர் தோழர் D.சந்திரசேகரன் இணைப் பொதுச் செயலாளர் பதவியிலும் இருப்பதால், காரைக்குடி
மாவட்டச் செயலாளர் தோழர் G.முத்துக்குமரன் பொறுப்பு மாநிலச் செயலாளராக செயற்குழுவில்
தமிழ் மாநிலத்தின் கருத்துக்களை எடுத்துரைத்தார்.
தலமட்டங்களில்
நிலவும் சுமூகநிலையைப் பொறுத்து, செயல்பாட்டு ஒற்றுமையின் அடிப்படையில், பொதுப் பிரச்சினைகளுக்காக
நடத்தப்படும் போராட்டங்களில் இதர சங்கங்களுடன் சேர்ந்து செயல்படுவது எனவும், BSNLEU-வுடனோ
அல்லது NFTE-வுடனோ தற்போதைக்கு கூட்டணி இல்லை எனவும் அகில இந்தியச் செயற்குழுவில் முடிவெடுக்கப் பட்டது.
பீஹார் மாநிலச் சங்கம் அகில இந்தியச் செயற்குழுவிற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
அகில இந்தியச்
செயற்குழு மற்றும் பீஹார் மாநில மாநாட்டை முன்னிட்டு பாட்னாவில் ஜூலை 7-ம் தேதி மாலை 3.30 மணியளவில் பொது
அரங்கம் நிகழ்ச்சி (Open House Session) நடைபெற்றது. 400-க்கும் அதிகமான தோழர்கள் பங்கேற்றனர்.
அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் K. ஜான், பொதுச் செயலாளர் தோழர் K. ஜெயப்பிரகாஷ்
ஆகியோர் சிறப்புரையாற்றினர். பீஹார் மாநிலத் தலைமைப் பொது மேலாளர் (CGMT/Bihar), பாட்னா
முதன்மைப் பொது மேலாளர் (PGMTD/Patna), NFTE பொதுச் செயலாளர் தோழர் சந்தேஷ்வர் சிங்
ஆகியோர் வருகை தந்து கடைசிவரை இருந்து வாழ்த்திச் சிறப்பித்தனர். மாலை 3.30 மணி முதல்
இரவு 7.30 மணிவரை கூட்டம் கலையாமல் அமைதி காத்தது ஈண்டு குறிப்பிடத் தக்கது.
Wednesday, July 12, 2017
Hunger Strike on 7th July by BSNLEU Alliance – FNTO Supports : BSNLEU கூட்டணியின் 13/7/2017 உண்ணாவிரதப் போராட்டம் – FNTO ஆதரவு.
பீஹார் தலைநகர்
பாட்னாவில் ஜூலை 7 மற்றும் 8-ம் தேதியன்று நடைபெற்ற அகில இந்தியச் செயற்குழுவின் முடிவுக்கிணங்க,
தலமட்டங்களில் நிலவும் சுமூகநிலையைப் பொறுத்து, செயல்பாட்டு ஒற்றுமையின் அடிப்படையில்,
BSNLEU தலைமையிலான கூட்டணி 13/7/2017 வியாழனன்று நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில்
தமிழ்மாநிலத்தில் FNTO-வும் பங்கேற்கும். முழுமையாகப் பங்கேற்க இயலாத தலமட்ட நிர்வாகிகள்
அன்றைய தினம் போராட்டக் களத்திற்குச் சென்று போராட்டத்தை வாழ்த்தி வரவேண்டுகிறோம்.
Saturday, June 3, 2017
குருஜி கனகசொரூபன் மறைவுக்கு அஞ்சலி
அஞ்சல்
தந்தி தொழிற்சங்க இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், அனைவராலும் குருஜி என்று அன்போடு
அழைக்கப்பட்டவருமான கடலூர் தோழர் கனக சொரூபன் 01/06/2017 காலை இயற்கை எய்தினார்.
அன்னாரது நல்லடக்கம் 02/06/2017 அன்று கடலூரில் நடைபெற்றது.
ஆரம்பத்தில்
ஒன்றுபட்ட NFPTE இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய குருஜி, பிறகு FNPTO
இயக்கத்தை தமிழகத்தில் உருவாக்கி, அரும்பாடுபட்டு
வளர்த்து, செம்மையாக வழிநடத்தினார். தனது உறுதியான செயல்பாடுகளால்
PTTI-ன் கவனத்தை ஈர்த்த குருஜி, தேசியச் சங்கத்தின் தமிழ் மாநில, அகில இந்திய மாநாடுகளில்
“கிங் மேக்கர்” ஆகவும் விளங்கினார்.
குருஜியின்
மறைவுக்கு தமிழ் மாநிலச் சங்கம் கொடிதாழ்த்திய அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறது.
Monday, May 1, 2017
Wednesday, March 8, 2017
மார்ச் 8 - சர்வதேச மகளிர் தினம்
மாதர்
தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்ற மகாகவி பாரதியின் வழி நடப்போம்.
அனைவருக்கும்
மனமார்ந்த
மகளிர் தின வாழ்த்துகள் !
Sunday, February 26, 2017
3rd PRC Recommendations for Executives
பொதுத் துறை
நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான
மூன்றாவது ஊதிய
மாற்றக் குழுவின் பரிந்துரைகள்
Salient features of 3rd Pay
Revision Committee recommendations:
a) Fitment benefit: Uniform
fitment of 15% on Basic + IDA.
If
the additional financial impact on the average of last 3 years PBT (Profit
Before Tax) is less than 20%, the fitment will be 15%. If it is more than 20%
but less than 30%, the fitment will be 10%. If it is more than 30% but less
than 40%, the fitment will be 5%. If it is more than 40%, the fitment will be
NIL.
ஊதிய மாற்றத்தால் ஏற்படும் கூடுதல் செலவானது
வரிக்கு முந்தைய லாபத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தின் அடிப்படையில் ஊதிய நிர்ணய
பலன் இருக்கும்.
b) Annual increment: 3%
c) Promotion
Increment: 3%.
d) Pay scales:
Level
Pre-revised
Revised
E0
12600-32500
30000-120000
E1
16400-40500
40000-140000
E2
20600-46500
50000-160000
E3
24900-50500
60000-180000
E4
29100-54500
70000-200000
E5
32900-58000
80000-220000
E6
36600-62000
90000-240000
E7
43200-66000
100000-260000
E8
51300-73000
120000-280000
E9
62000-80000
150000-300000
e) Stagnation
increment: One increment after every
two years, upto a maximum of 3 such increments.
f) IDA as on 01.01.2017: 100%
neutralisation on 01.01.2017.
g) HRA: 24%,
16%, 8% in place of existing 30%, 20% and 10%. The
HRA will be revised to 27%, 18% and 9% when IDA crosses 50% and further revised
to 30%, 20% and 10% when IDA crosses 100%.
h) Superannuation benefits: It
has to be under defined
contribution scheme instead
of defined benefit scheme.
i) Ceiling of gratuity to
be enhanced from Rs 10 lakhs to Rs 20 lakhs from 01.01.2017. The ceiling of
gratuity shall increase by 25% when IDA crosses 50%.
ii) The current limit of 30% of Basic pay +IDA will
continue.
iii) The minimum qualifying service of 15
years not to be mandated for contributory pension. However it will be mandatory
for medical benefits.
i) Date of effect: 01.01.2017
for pay scales, benefits and allowances.
j) Retirement age: No
change.
k) Periodicity: Not
later than 10 years, in line with Central Govt employees. Under no
circumstances periodicity of wage revision for workmen should be less than the
periodicity of the Executives.
Friday, January 13, 2017
பொங்கல் நல்வாழ்த்துகள்
இஞ்சியுடன் மஞ்சளும் இனிதான செங்கரும்பும்
விஞ்சி மிகச்சிறந்து விளைந்திட்ட செந்நெல்லும்
அறுவடை செய்திங்கு அகமகிழும் உழவர்
ஆதி கதிரவனை அருமைக் கால்நடையை
வணங்கி மிகப்பணிந்து வாழ்த்திப் பொங்கலிட்டு
தம்நன்றி கொண்டாடும் தமிழர் திருநாளில்
பொங்குக மங்களம் எங்கனும் பூமியில்
தங்குக மகிழ்ச்சியும் மனநிறைவும் தங்களில்.
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல், தமிழர் திருநாள்,
உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்
Thursday, January 5, 2017
Health Check-up & Reimbursement permitted in BSNL
All
BSNL Employees below the rank of GM are permitted to undertake Health Check-up
once in a year in any hospital.
The
reimbursement for such Health Check-up will be restricted to Rs.3500/- within
the annual ceiling prescribed for outdoor medical expenses.
BSNL தொழிலாளர்கள்
அனைவரும் எந்த மருத்துவமனையிலும் வருடாந்திர மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள நிர்வாகம்
அனுமதியளித்துள்ளது.
அதற்கான செலவுத்தொகை அதிகபட்சமாக ரூ.3500-க்கு மிகாமல் – வருடாந்திர
மருத்துவ செலவின வரம்புக்கு உட்பட்டு – திருப்பியளிக்கப்படும்.
For
orders, Click here.
Sunday, January 1, 2017
Subscribe to:
Posts (Atom)