FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Monday, January 9, 2012

தேவையில்லை வீண் குழப்பம் ! No room for confusion !


தங்களுடைய உறுப்பினர்களின் பிரச்சினைகளை  நிர்வாகத்துடன் பேசித் தீர்த்துக் கொள்வதற்கான உரிமையை இந்திய தொழிற்சங்கங்கள் சட்டம் (Indian Trade Union Act) பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு வழங்கியிருக்கிறது.
தொழில் அமைதியைப் பேணும் வகையில், அங்கீகரிக்கப்படாத சங்கங்களின் உறுப்பினர்களுடைய பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதற்கு வசதியாக அங்கீகரிக்கப் படாத சங்கங்களின் பிரதிநிதிகளைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சந்திப்பதற்கு (informal meetings) தடையேதும் இல்லை என்று ஏற்கனவே பல உத்தரவுகள் மூலம் BSNL கார்ப்பரேட் நிர்வாகமும் தெளிவுபடுத்தியுள்ளது.  
ஆங்காங்கே ஓரிரு அடமண்டு அதிகாரிகளைத் தவிர பெரும்பாலான மாவட்ட, மாநில, கார்ப்பரேட் அலுவலக அதிகாரிகளை - CMD உட்பட - அங்கீகரிக்கப்படாத சங்கங்களின் பிரதிநிதிகள் அவ்வப்போது சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து வருகிறார்கள்.
தற்போது 5-1-2012 தேதியிட்ட உத்தரவில் மீண்டும் அதையே வலியுறுத்தியுள்ள நிர்வாகம், கூடவே 15% வாக்குகள் என்றும் குறுக்குச்சால் ஓட்டியிருக்கிறது. இது இரண்டாவது அங்கீகாரமோ அல்லது தொழிற்சங்க உரிமையோ அல்ல. மாறாக, யாரையோ தற்காலிகமாகத் திருப்திப் படுத்துவதற்காக சில குட்டி அதிகாரிகள் செய்த சித்துவேலை போலவே தோன்றுகிறது. இது தொழிலாளர்களிடம் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தவும், குழம்பிய குட்டையில் சிலர் மீன்பிடிக்கவும் உதவுமேயன்றி, வேறு பயனேதுமில்லை.
முதல் சரிபார்ப்புத் தேர்தலிலிருந்தே, BSNL-க்குப் பொருந்தாத Code of Discipline-ஐ மாற்ற வேண்டுமென்றும், BSNL-க்கென்று புதிய அங்கீகார விதிகளை உருவாக்க வேண்டுமென்றும், பதிவு செய்யப்பட்ட அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் குறைந்தபட்ச உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி FNTO போராடி வருகிறது. ஆதியில் இதை எதிர்த்த சில சங்கங்கள் கூட தற்போதைய சூழ்நிலையில் ஆதரிக்கின்றன. இது சம்பந்தமாக கேரள உயர்நீதிமன்றத்தில் FNTO தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையிலுள்ளது. மேலும், இடைக்கால உத்தரவாக, 5-வது தேர்தலுக்குப் பிறகு வழங்கப்படும் அங்கீகாரமானது இந்த வழக்கின் முடிவைப் பொறுத்தே அமையும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட சங்கம் கூட தனது கருத்தை மாற்றிக் கொண்டு, விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து விட்டது. எனவே, பிற சங்கங்கள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நிலையில், FNTO தனித்து நின்று 5-வது தேர்தலில் 8 சத வாக்குகளைப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, FNTO-வுக்கும் அங்கீகாரம், குறைந்தபட்ச தொழிற்சங்க உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி FNTO-வின் பொதுச் செயலர்(பொறுப்பு) தோழர் K.ஜெயப்பிரகாஷ் CMD-யைச் சந்தித்து விவாதித்துள்ளார். நமது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று CMD-யும், Director(HR), PGM(SR) ஆகியோரும் உறுதியளித்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், குறைந்தபட்ச தொழிற்சங்க உரிமைகள் வழங்குவதற்குப் பதிலாக, ”எலும்புத் துண்டுசலுகைகள் வழங்க எத்தனிக்கும் நிர்வாகத்தின் போக்கு  எதேச்சாதிகாரமானது, கண்டிக்கத் தக்கது. இந்த இழிநிலை மாறும், மாற்றுவோம்.
தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும்”.
ஆகவே, தோழர்களே, தெளிவுடன் இருப்போம், விழிப்புடன் இருப்போம். தேவையில்லை வீண் குழப்பம் !

1 comment: