சமீபத்திய ”தானே” புயல் ஏற்படுத்திய பேரழிவின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி
மாநிலங்களில் பெரும்பாலான மக்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். புயலாலும் வெள்ளத்தாலும்
வீடுகளையும் உடமைகளையும் இழந்து சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆட்பட்டிருக்கும் இம்மக்களுக்கு
மத்திய மாநில அரசுகள் உதவிக்கரம் நீட்டி இருக்கின்றன. இந்த இயற்கைச் சீற்றங்களால் BSNL
தொழிலாளர்களுக்கும் பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, பாதிக்கப் பட்டுள்ள தஞ்சாவூர்,
கும்பகோணம், கடலூர் மற்றும் புதுச்சேரி தொலைத்தொடர்பு மாவட்டங்களைச் சேர்ந்த BSNL தொழிலாளர்களுக்கு
உரிய நிவாரணம் – மத்திய நல நிதியத்திலிருந்து (Central Welfare Fund) நிதியுதவி, சிறப்பு
நல நிதியத்திலிருந்து (Special Welfare Fund) வட்டியில்லாக் கடன் மற்றும் நிர்வாகத்தின்
சார்பில் வட்டியில்லா முன்பணம் (Interest free Advance for Natural Calamities) – வழங்க
வலியுறுத்தி FNTO தமிழ்மாநிலச் சங்கம் CGM மற்றும் GM(Finance) ஆகியோரைச் சந்தித்து
கடிதம் கொடுத்து விரிவாக விவாதித்திருக்கிறது. மாநில நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை
எடுப்பதாக உறுதியளித்திருக்கிறது.
Fnto Thane
No comments:
Post a Comment