நலிவடைந்த நிறுவனங்களின் ஓய்வு வயதை உயர்த்த பரிசீலனை
நலிவடைந்த
பொதுத்துறை நிறுவனங்களைச் சீரமைக்கும் விதமாக, அந்தந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின்
ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தும் திட்டம் அரசின் பரிசீலனையில் இருக்கிறது.
ஏற்கனவே
58 ஆக இருக்கும் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக
உயர்த்தும் திட்டமானது, BRPSE என்னும்
நலிவுற்ற பொதுத்துறை நிறுவனங்களைச் சீரமைப்பதற்கான வாரியத்தின் ஆலோசனைப்படியே செயல்படுத்தப்பட
உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
புனரமைக்கப்பட்டுக்
கொண்டிருக்கும் சில நிறுவனங்களுடைய ஊழியர்களின் ஓய்வு வயது ஏற்கனவே 60 ஆக உயர்த்தப்பட்டுவிட்ட
போதிலும், முடிவுகள் நிறுவனத்திற்கேற்ப எடுக்கப்படுமென்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
இருந்தபோதிலும்,
BRPSE–ன் ஆலோசனைப்படி, நலிவுற்ற பொதுத்துறை நிறுவனங்களைப் புனரமைப்பதில்
முக்கியப் பங்காற்றவிருக்கும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு சரியான கொள்கை வகுக்கப்படும்.
No comments:
Post a Comment