தேசிய
BSNL தொழிலாளர் சங்கம் – FNTO வின் அகில
இந்திய மாநாடு பிப்ரவரி 3 மற்றும் 4-ம் தேதிகளில் ஹைதராபாத், ஒஸ்மானியா பல்கலைக்கழக
வளாகத்திலுள்ள I.E.T.E. ஆடிட்டோரியத்தில் சிறப்பாக நடைபெற்றது. அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் ஜான்.K தலைமையேற்க,
வரவேற்புக் குழுவின் பொதுச் செயலாளரும் தெலுங்கானா மாநிலச் செயலாளருமான தோழர் ரஃபீக்
அஹமது வரவேற்புரையாற்ற, அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் K.ஜெயப்பிரகாஷ் மாநாட்டைத்
துவக்கி வைத்தார்.
பிப்ரவரி
3-ம் தேதி மாலையில் நடைபெற்ற பொது அரங்கு நிகழ்ச்சியில் INTUC அகில
இந்தியத் தலைவர் தோழர் G.சஞ்சீவரெட்டி, NFTE பொதுச் செயலாளர் தோழர் சந்தேஷ்வர்
சிங், BTEU பொதுச் செயலாளர் தோழர் R.C.பாண்டே, TOA-BSNL பொதுச் செயலாளர் தோழர் அனில்
திவாரி, ITEF-BSNL பொதுச் செயலாளர் தோழர் S.V.S.சுப்ரமண்யம், BSNLMS பொதுச் செயலாளர்
தோழர் சுரேஷ்குமார், BSNLOA பொதுச் செயலாளர் தோழர் கபீர்தாஸ், BSNLATM அகில இந்தியத் தலைவர் தோழர் அனில்குமார் , SNEA(I) உதவிப் பொதுச் செயலாளர்
தோழர் பத்மனாப ராவ், AIBSNLEA உதவிப் பொதுச் செயலாளர் தோழர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, BDPA(I) பொதுச் செயலாளர்
தோழர் D.D.மிஸ்திரி, FNTO வின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் K.வள்ளிநாயகம் உள்ளிட்ட
தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
மக்கள்
பிரதிநிதிகள் சார்பில் வரவேற்புக் குழுவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
திரு மல்லு ரவி, தெலுங்கானா சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு மல்லு பட்டி விக்ரமார்க்கா
மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பேச்சாளர் திரு தஜோசு ஸ்ரவண் ஆகியோர் வாழ்த்திப்
பேசினர்.
பொருளாய்வுக்
குழுவில் செழுமையான விவாதங்களைத் தொடர்ந்து, அமைப்புநிலை மற்றும் நிதிநிலை ஆய்வுக்குப்
பின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
தோழர்
தாமஸ் ஜான்.K அகில இந்தியத் தலைவராகவும், தோழர் K.ஜெயப்பிரகாஷ் பொதுச் செயலாளராகவும்,
தோழர் B.C.பாத்தக் அகில இந்தியப் பொருளாளராகவும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
தமிழகத்தின்
சார்பில், தோழர் D.சந்திரசேகரன் (வேலூர்) இணைப் பொதுச் செயலாளராகவும், தோழர் G.முத்துக்குமரன்
(காரைக்குடி) மற்றும் தோழர் R.ஜெயபாலன் (கடலூர்) ஆகியோர் உதவிப் பொதுச் செயலாளர்களாகவும்
தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
இந்த
மாநாட்டின் சிறப்பம்சமாக, காரைக்குடி SSA-விலிருந்து அதிகபட்சமாக 34 சார்பாளர்கள் கலந்துகொண்டு
முதலிடம் பெற்றது குறிப்பிடத் தக்கதாகும்.