FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Thursday, March 8, 2012

மார்ச் – 8 : 101-ஆவது சர்வதேச மகளிர் தினம்


1911-ஆம் ஆண்டு முதலாவது சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் பட்டது. ஆகவே, இது நூற்றியொன்றாவது  சர்வதேச மகளிர் தினமாகும் என்ற வகையில் இன்றைய தினம் முக்கியத்துவம் பெறுகிறது.

அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் பெண்கள் அடைந்த முன்னேற்றங்களைக் குறிக்கும் முகமாகவும் பெண்களுக்கான சமத்துவம் மற்றும் உரிமைகளை வலியுறுத்தும் விதமாகவும் சர்வதேச மகளிர் தினம் உலகமெங்கும் கொண்டாடப் படுகிறது.

மார்ச் 8-ஆம் தேதி எதற்காக ?

1857-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்த பெண்கள் மிகப்பெரும் வேலைநிறுத்தமொன்றை மேற்கொண்டிருந்தனர். அக்காலத்தில், ஆண்களுக்கான வேலை நேரம் 10 மணி நேரமாகக் குறைக்கப் பட்டிருந்தது. எனினும், பெண்கள் தொடர்ந்து 16 மணி நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்படி வேலை நிறுத்தம் நடைபெற்றது. அத்தினத்தையொட்டியே, மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாகத் தெரிவு செய்யப் பட்டது.

உலக மகாகவி பாரதியார் பாடியபடி ”ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக” வாழவும், கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தபடி, “கல்வி, பயிற்சி மற்றும் விஞ்ஞானம் தொழில்நுட்பத்தில் பெண்களுக்கு சமத்துவ வாய்ப்பும் கண்ணியமான வேலைக்கான வழியும்” உருவாக்கப்படவும், ஒவ்வொரு ஆணும் பெண்ணும் உள்ளசுத்தியோடு பாடுபட வேண்டும்.

அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள் !

No comments:

Post a Comment