இன்றைய முகப்புக் குறள்
செய்தக்க அல்ல செயக்கெடும்
செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
செய்யக்
கூடாத செயல்களைச் செய்வதாலும் கெடுதல் நேரும், செய்யக் கூடிய செயல்களைச் செய்யாமல் விடுவதாலும் கெடுதல் நேரும் என்று திருவள்ளுவர்
அந்தக் காலத்திலேயே சொல்லியிருக் கிறார் – BSNL-ஐ நினைத்துதான்
போலும்.
நாளுக்கு
நாள் அதிகரிக்கும் நட்டத்தில் சிக்கித் தவித்துக்
கொண்டிருக்கும் BSNL நிறுவனத்தின் நிதிநிலையைச் சீராக்கு வதற்கு
என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று ஒவ்வொரு தொழிலாளியும்
அதிகாரியும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம் இது.
வருவாயைப் பெருக்குவதிலும் வராக் கடன்களை வசூலிப்பதிலும் முனைப்போடு செயலாற்றும் அதே
வேளையில் வெட்டிச் செலவுகளைக் குறைப்பதிலும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதிலும் ஒவ்வொருவரும்
அதீத அக்கறையோடு செயல்பட்டால் தான் BSNL-லுக்கு ஏற்பட்டுள்ள நிதி
நெருக்கடி யிலிருந்து மீளமுடியும். BSNL-ஐக் காப்போம் என்ற வெற்றுக்
கோஷங்கள் மட்டும் கவைக்கு உதவாது.
அந்த வகையில், திரு சு.இராமகிருஷ்ணன்
DGM(F)/KKD தலைமையிலான TRA Team-ஐ எவ்வளவு பாராட்டினாலும்
தகும். 8 வருடங்களாக அஞ்சல் துறையிடமிருந்து வாராதிருந்த
60 லட்சம் ரூபாயை வசூலித்ததாகட்டும் அல்லது தொலைபேசி பில் அச்சடிப்புச்
செலவைக் குறைத்து வருடத்திற்கு 3 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தியதாகட்டும்
– சபாஷ் சரியான போட்டி.
இதனால், காரைக்குடி
என்றாலே மோசம் என்று மாநில நிர்வாகம் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்த நிலை சற்றே மாறி,
இப்போது தமிழ் மாநிலமே காரைக்குடியைத் திரும்பிப் பார்க்கக் கூடிய நிலை
உருவாகி, காரைக்குடி SSA-வின் மவுசு கூடியுள்ளது.
இதற்குக்
காரணகர்த்தர்களான KKD TRA Team, குறிப்பாக திரு சு.இராமகிருஷ்ணன் DGM(F)/KKD,
திரு ந.சந்திரசேகரன் CAO(TR),
திரு மு.வாவேர்துரை AO(Billing) மற்றும்
திரு R.மாரிமுத்து CLR
ஆகியோர்
பாராட்டுதலுக்குரியவர்கள்.
இதேபோல, போன் மெக்கானிக் தோழர்கள் மூலமாக தொலைபேசி பில்
பட்டுவாடா செய்யலாமென்ற BSNL கார்ப்பரேட் அலுவலக உத்தரவைச் செயல்படுத்துவதன்
மூலமாகவும் வருடத்திற்கு 6 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த முடியும்.
தவிரவும், அஞ்சலகங்கள் மூலம் வசூலிக்கப்படும் தொலைபேசி
பில் ஒவ்வொன்றுக்கும் கமிஷன் 5 ரூபாய் என்றிருந்ததை தற்போது
10 ரூபாயாக உயர்த்தியிருப்பதனால் அந்தச் செலவும் இரட்டிப்பாகவுள்ளது.
போன் மெக்கானிக் தோழர்கள் மூலமாக தொலைபேசி பில் வசூல் செய்யலாமென்ற உத்தரவையும்
செயல்படுத்துவதன் மூலமாக வருடத்திற்கு பல லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த முடியும்.
அது மட்டுமின்றி, இந்த வேலைகளை விரும்பி ஏற்றுக்
கொள்ளும் தோழர்களுக்கு ஊக்க ஊதியமும் வழங்கப் படுகிறது.
இந்த வகையில், DGM(F)/KKD அவர்களுடைய நல்லெண்ண நடவடிக்கைகளை நாமும் ஆதரிப்போம்.
BSNL-ஐக் காப்போம் !