தேசிய BSNL தொழிலாளர் சங்கம்-FNTO வின் அகில இந்தியச் செயற்குழுக்
கூட்டம் டிசம்பர் 1, 2 தேதிகளில் சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய சூழலில் BSNL மற்றும் தொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும்
பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விரிவான விவாதங்கள் நடைபெற்றன. செயற்குழுவில்
காலியாக இருந்த பதவிகள் நிரப்பப் பட்டன. தமிழகத்தின் சார்பில், திருச்சி மாவட்டச் செயலரும்
மூத்த தோழருமான அப்துல் வஹாப் உதவிப் பொதுச் செயலராக நியமிக்கப் பட்டார்.
டிசம்பர் 2-ம் தேதி முற்பகலில், BSNL-ன் சேவைகள் மற்றும் வாடிக்கையாளரின் தேவைகள்
(BSNL Services and Customer orientation) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தேசியச் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் ஜான் தலைமையேற்று கருத்தரங்கத்தைச்
செழுமைப் படுத்தினார். திரு A.சுப்பிரமணியன்,
CGM, Chennai Telephones மற்றும் திரு
முகம்மது அஸ்ரப் கான், CGM, TN Circle ஆகியோர் கலந்துகொண்டு BSNL-ன் புதிய சேவைகள் குறித்தும், தரமான சேவைகள்
மூலம் BSNL-ஐ வலுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினர்.
No comments:
Post a Comment