வேலூர் மாவட்ட சங்க இணைய தளத்திலிருந்து
ஊழியருக்காகவும், துறைக்காகவும் கேள்வி கேட்டு
கையை நீட்டாமல், LIC -க்கும் மற்ற மற்ற
நிறுவனங்களுக்கும் புரோக்கராக செயல்பட்டு, பெட்டி வாங்க மட்டும் கையை நீட்டும் சங்கம் மட்டுமே BSNL- க்கு தேவையாம் !
கையை நீட்டாமல், LIC -க்கும் மற்ற மற்ற
நிறுவனங்களுக்கும் புரோக்கராக செயல்பட்டு, பெட்டி வாங்க மட்டும் கையை நீட்டும் சங்கம் மட்டுமே BSNL- க்கு தேவையாம் !
தோழர்களே !
16.09.2010 அன்று, ஐந்தாவது உறுப்பினர் சரிபார்ப்பிற்கான Code of
Discipline - களில் மாற்றம் பற்றி விவாதிக்க, BSNL மற்றும் 13
சங்கங்களுக்கு இடையே ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் 11
சங்கங்கள் BSNL-க்கு என புதிய உறுப்பினர் சரிபார்ப்பிற்கான விதிகளை
உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தின. ஆனால், BSNLEU மற்றும்
TEPU சங்கங்கள் மட்டும் தற்போதைய விதிகளின்படியே அடுத்த
உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தின.
தான் சொன்னதெற்கெல்லாம் தலையாட்டும் சங்கம் இருந்தால் தான்
Sam Pitroda குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த முடியும்
என்பதாலும், அந்த சங்கத்திற்கு அடிக்கடி LIC Broker வேலை
கொடுத்தால் மட்டும் போதும் என்பதாலும், BSNL நிர்வாகம்
தற்போதுள்ள விதிகளின் படியே அடுத்த உறுப்பினர் சரிபார்ப்பு
தேர்தலை நடத்துவது என்ற முடிவை தன்னிச்சையாக அறிவித்தது. நமது விடுப்பை காசாக்கும் திட்டத்திற்காக செலுத்தப்பட்ட பிரீமியமான ரூ.4853 கோடியால் கமிஷன் பெற்ற தனக்கு வேண்டிய சங்கம் வெற்றி பெற்றுவிடும் என்பது BSNL-இன் கனவு. இதனை கண்டித்து 8 சங்கங்கள் வெளி நடப்பு செய்தன. அதற்கு பின்னர் நிர்வாகம் தேர்தலுக்கான தேதிகளையும் வெளியிட்டுள்ளது.
இலாகா நாளுக்கு நாள் நலிந்து வரும் இந்த சூழலில், ஊழியர் பிரச்னைகளில் தீர்வு என்பது அறவே அற்றுப்போன நிலையில், 2வது சங்கத்திற்கு அங்கீகாரம் மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவம் இருந்தால் மட்டுமே, அனைத்து ஊழியர் குரலையும் பிரதிபலிக்க முடியும் என்பது NFTE, FNTO உள்ளிட்ட இந்த 8 சங்கங்களின் நிலைபாடு.
எனவே, நிர்வாகத்தின் இந்த தன்னிச்சையான போக்கை கண்டித்தும், புதிய விதிகளை உருவாக்கி அவற்றின் அடிப்படையில் 5வது உறுப்பினர் சரிப்பார்ப்பு தேர்தலை நடத்தக்கோரியும் 30.09.2010 அன்று ஆர்பாட்டம் நடத்த இந்த 8 சங்கங்களும் அறைகூவல் விடுத்துள்ளன.
[ தோழர் சீதாராம் யெச்சூரி 2008-இல் நடைபெற்ற 2G ஒதுக்கீட்டில் 1லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்த அமைச்சரை பதவி நீக்கம் செய் என்று கூறுகிறாரே, அப்புறம் எப்படி BSNLEU-ம், TEPU-ம் ஒரே குரலில் பேசுகின்றன என்று ஆச்சர்யப்பட வேண்டாம்! யெச்சூரியை சார்ந்திருக்கும் சங்கமான BSNLEU அப்படியெல்லாம் குரலெழுப்புவதே இல்லை, TEPU-விடமே கைக்கு அடக்கமாகத்தான் அந்த சங்கம் இருக்கிறதாம்.]
வேலூர். K.அல்லிராஜா,
16.09.2010 மாவட்ட செயலர்.
No comments:
Post a Comment