FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Wednesday, July 29, 2015

People's President - மக்களின் ஜனாதிபதி Dr.A.P.J.அப்துல் கலாம்

கண்ணீர் அஞ்சலி


மக்களின் ஜனாதிபதி, இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று எல்லோராலும் பாராட்டப் பெற்ற –

இராமேஸ்வரம் புண்ணிய பூமியில் பிறந்து பாரதத் தாயின் புண்ணிய மைந்தர்களில் தலைசிறந்த ஒருவராக விளங்கிய –

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் தனது அறிவு, திறமை, உழைப்பு ஆகியவற்றால் உயர்ந்து, நாட்டின் முதல் குடிமகன் என்ற உச்சத்தைத் தொட்ட –

இந்தியா விரைவில் வல்லரசாக வேண்டுமென்று கனவு கண்ட –

எல்லோரையும் கனவு காணச் சொல்லி இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் ரோல் மாடலாக விளங்கிய –

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு நமது கொடி தாழ்த்திய அஞ்சலியைக் காணிக்கையாக்குகின்றோம்.